blue rice

குக் வித் கோமாளியில் இர்பான் சமைத்த சங்குப் பூ சாதத்தின் ரெசிபி

அரை மணி நேரத்தில் ஆரோக்கியமான உணவை சமைக்க விருப்பமா ? இதோ உங்களுக்கான சங்குப் பூ சாதத்தின் ரெசிபி.
Editorial
Updated:- 2024-05-13, 14:10 IST

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. புதிய போட்டியாளர்கள் விதவிதமாக சமைத்து நடுவர்களை வியக்க வைக்கின்றனர். நிகழ்ச்சியை காணும் போது சில உணவுகளை ருசிக்க வேண்டுமென நமக்கும் ஆசை ஏற்படும் அல்லது வீட்டிலேயே முயற்சிக்க நினைப்போம். அந்த வகையில் இனி Chef of the week விருதினை பெற்ற நபர் தயாரிக்கும் உணவு மற்றும் கவனம் ஈர்க்கும் உணவின் ரெசிபியை பகிர இருக்கிறோம். கடந்த வாரம் யூடியூபர் இர்பான் நீல நிறத்தில் சாதம் செய்திருந்தார். பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. நடுவர்களிடம் காண்பிக்கும் போது அதை சங்குப் பூ சாதம் என குறிப்பிட்டார். சங்குப் பூ பற்றி படிக்கும் போது அது பல மருத்துவ நன்மைகளை கொண்டது என தெரியவந்தது. வாருங்கள் சங்குப் பூ சாதத்தின் செய்முறையை பார்க்கலாம்.

butterfly pea flower rice

சங்குப் பூ சாதம் செய்யத் தேவையானவை

  • சங்குப் பூ
  • பாஸ்மதி அரிசி 
  • நெய் 
  • முந்திரி 
  • இஞ்சி - பூண்டு பேஸ்ட்
  • பட்டை 
  • கிராம்பு 
  • உப்பு

சங்குப் பூ சாதம் செய்முறை 

  • 250 கிராம் பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் நன்கு கழுவி 30 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
  • பாத்திரத்தில் 250 கிராம் பாஸ்மதி அரிசியை வேக வைப்பதற்கான தண்ணீர் எடுத்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்த உடன் 40 சங்குப் பூவை அதில் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
  • தண்ணீரின் நிறம் மாறியவுடன் வடிகட்டி விடுங்கள்.
  • இப்போது குக்கரில் 50 கிராம் நெய் ஊற்றி அது உருகியவுடன் பட்டை, கிராம்பு போட்டு வறுக்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து இரண்டு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் மற்றும் பாஸ்மதி அரிசிக்கு தேவையான அளவு உப்பு போடுங்கள். ஊறவைத்த அரிசியை இதில் போட்டு இரண்டு விசில் அடிக்க விடுங்கள்.
  • சாதம் வெந்தவுடன் கொஞ்சம் வறுத்த முந்திரி சேர்த்தால் சங்குப்பூ சாதம் ரெடி.

சங்குப் பூ நன்மைகள்

  • மாதவிடாய் காலத்தில் வெறும் வயிற்றில் சங்குப் பூ சாப்பிட்டால் வயிற்று வலியை தாக்குப்பிடிக்கலாம்.
  • சின்ன வயதிலேயே முடி கொட்டுவதை சங்குப் பூ தவிர்க்கும் என கூறப்படுகிறது. 
  • சங்குப் பூ நினைவாற்றலை அதிகரிக்கும், மன சோர்வை குறைக்கும்.
  • உடலில் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்கவும் சங்குப் பூ உதவும்.
  • குறிப்பாக சங்குப் பூ டீ உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது.

சங்குப் பூ சாதம் தாய்லாந்தில் பிரபலமான உணவாகும். இதுபோல பிற போட்டியாளர்களின் உணவின் செய்முறையும் இங்கு பகிரப்படும். ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com