பெங்களூருவில் கிடைக்கும் ஏராளமான பிரியாணி வகைகளில் தொன்னை பிரியாணி மிகப் பிரபலம். பல இடங்களில் மிலிட்டரி ஸ்டைல் தொன்னை பிரியாணி விற்பனை என்று பலகைகளை பார்க்கலாம். பெங்களூருவின் அனைத்து இடத்திலும் கர்நாடகாவின் ஒரு சில இடங்களில் இந்த தொன்னை பிரியாணி கிடைக்கும். சீரக சம்பா அரிசியை வைத்து இந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி சாப்பிட்டு சலிப்பு அடைந்தவர்களுக்கு இந்த தொன்னை பிரியாணி புதுவித சுவையை கொடுக்கும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
தொன்னை பிரியாணி
- சீரக சம்பா அரிசி
- நல்லெண்ணெய்
- நெய்
- உருளைக்கிழங்கு
- கேரட்
- பீன்ஸ்
- பட்டாணி
- இலவங்கம்
- பட்டை
- ஏலக்காய்
- கிராம்பு
- வர மிளகாய்
- கொத்தமல்லி
- புதினா
- வெந்தய இலை
- வெங்காயம்
- தண்ணீர்
- மஞ்சள் தூள்
- தனியா தூள்
- தயிர்
குறிப்பு : நீங்கள் அசைவம் சாப்பிடும் நபராக இருந்தால் காய்கறிகளுக்கு பதில் கால் கிலோ சிக்கன், வேகவைத்த முட்டை பயன்படுத்தவும்.
தொன்னை பிரியாணி செய்முறை
- 75 கிராம் தயிரில் 200 கிராம் அளவிற்கு வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு ஊறவிடுங்கள்.
- தொன்னை பிரியாணிக்கு மிக முக்கியமான பேஸ்ட் ஒன்று உல்ளது. கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நான்கு பட்டை, இரண்டு ஏலக்காய், ஆறு கிராம்பு, 20-30 பூண்டு, 30 கிராம் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- இவை நன்கு வதங்கியவுடன் ஐந்து பச்சை மிளகாய், இரண்டு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி நிறம் மாறியவுடன் ஒரு கை புதினா மற்றும் கொத்தமல்லி பிறகு கொஞ்சமாக வெந்தய இலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
- பாத்திரத்தின் சூட்டிலேயே புதினா, கொத்தமல்லி, வெந்தய இலை சுருங்கி விடும்.
- சிறிது நேரம் கழித்து இவற்றை மிக்ஸியில் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்திடுங்கள்.
- மிதமான சூட்டில் குக்கரில் 100 எம்.எல் நெய் ஊற்றி மூன்று கிராம்பு, ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பிரியாணி இலை போட்டு இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.
- வெங்காயம் வதங்கிய பிறகு தயிரில் ஊறிய காய்கறிகளை போடுங்கள்.
- அடுத்ததாக அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள் மற்றும் கொஞ்சமாக பிரியாணி மசாலா பவுடர் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு உப்பு போடுங்கள்.
- இரண்டு நிமிடங்கள் கழித்து மிக்ஸியில் அரைத்த பேஸ்ட் முழுவதையும் சேர்த்திடுங்கள்.
- அரை கிலோ சீரக சம்பா அரிசிக்கு முக்கால் லிட்டர் கணக்கில் ஊற்றி குக்கரை தோசைக்கல் மீது வைத்து சூடுபடுத்துங்கள்.
- 20 நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும். மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்துவிட்டு தொன்னையில் பரிமாறுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation