திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வாகனங்களுக்கும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கும்பகோணம் நவகிரக திருத்தலங்களில் சிறப்பு தரிசனத்திற்கு குறைந்த பட்ஜெட்டில் இப்படி போகலாம்
தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள். இது தவிர பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் அடிக்கடி சாமி தரிசனம் செய்கின்றனர்.
அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை:
ஒவ்வொரு நாளும் திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால், அவர்களின் வசதிக்கு ஏற்ப பல முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சேஷாசலம் மலையில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே திருமலை அமைந்துள்ளது. இங்கு பலரும் தங்கள் சொந்த வாகனங்களான கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகளில் அதிக அளவில் வருகின்றனர்.
இங்கு வரும் வாகனங்கள், அலிபிரி சோதனை சாவடி வழியாக வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக, அப்பகுதி எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்ததாக காணப்படுகிறது. இது தவிர, திருமலையில் இருக்கும் சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்துவதற்காக அனைத்து விதமான வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்களுக்கு இடையூறாக அமைகிறது.
மேலும் படிக்க: ஆடி மாத ஆன்மிக சுற்றுலா : தஞ்சையின் முக்கிய கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கலாம்
ஃபாஸ்டேக் கட்டாயம்:
இதனை குறைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருப்பதை போன்று, திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியில் ஃபாஸ்டேக் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதன் பேரில், இனி ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருமலைக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திருப்பதி திருமலை தேவஸ்தானம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள், திருமலைக்கு உள்ளே அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி கூட்டத்தை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் பயண நேரமும் கணிசமான அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation