
குழந்தை வரம் வேண்டி தம்பதிகள் கோவில்களுக்குச் செல்லும் காலங்கள் மறைந்துவிட்டன. இன்றைக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிவிட்டாலே குழந்தைகளுக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நிலை வந்துவிட்டது. இயற்கையான முறையில் இல்லாமல் எப்போது மருத்துவமனைக்குச் சென்றோமோ? அப்பொழுதே குழந்தைகளை விலைக் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். ஐவிஎஃப், ஐஓயு போன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் முதல் முறையே குழந்தைகள் கருத்தரிக்க உதவுவமா என்றால் நிச்சயம் இல்லை. எனவே திருமணமாகி ஓராண்டு காலத்திற்குத் தம்பதிகள் குழந்தைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் எனவும் உடல் ஆரோக்கியத்துடன் உடலுறவு கொள்ளும் போது இயற்கையாக குழந்தைப் பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணமான முதல் 3 மாதங்களுக்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் ஆரோக்கியமான முறையில் உடலுறவு கொள்ளும் போது இயற்கையாகவே கருத்தரிக்க முடியும். இதோடு மட்டுமின்றி உடலுறவு கொள்வதற்கான சிறந்த காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொதுவக மாதவிடாய் காலம் முடிந்து 14 நாட்களுக்குப் பின்னதாக பெண்களுக்கு கருமுட்டை வெளியே வரக்கூடும். இந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளும் போது இயற்கையாகவே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவை அனைவருக்கும் பொருந்துமா? என்றால் இல்லை. மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் சரியாக இருக்கும் பெண்களுக்குப் பொருந்தும். ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு மாதம் மாதம் சரியாக மாதவிடாய் காலம் வருவதில்லை. இந்த நிலையில் உள்ள பெண்கள் முந்தைய மாதம் எப்போது மாதவிடாய் காலம் வந்ததோ? அடுத்த மாதம் அதிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் அல்லது மாதவிடாய் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின்னதாக உடலுறவில் ஈடுபட வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது இயற்கையான முறையில் குழந்தைப் பெற்றுகெ் கொள்ள முடியும்.
மேலும் படிக்க: பிரசவத்திற்குப் பின்னதாக ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா? 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்க போதும்
அடுத்தாக ஓவலேசன் ப்ரீயட்டை கணக்கிட்டு உடலுறவில் ஈடுபட வேண்டும். ஆம் இன்றைக்கு குழந்தைகள் வயிற்றில் வளர்கிறதா? என்பதை அறிந்துக் கொள்வதற்கு ப்ரக்னன்சி கிட் உபயோகிக்கிறோமோ? அதே போன்று பெண்களுக்கு ஓவலேசன் நேரம் எப்போது வருகிறது? என்பதைக் கணக்கிட்டு தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாம். ஆம் ஓவலேசன் கிட் என்பது அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கிறது. எனவே அதைப் பெற்றுக் கொண்டு வழக்கமான சோதனை மேற்கொள்வது போன்று சிறுநீரை வைத்து சோதனை செய்துப் பார்க்கலாம். இதில் இரண்டு கோடுகள் வரும் போது கருமுட்டை வெளிவருவதற்கான நேரம் என்பதை அறிந்துக்கொண்டு தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாம். இவ்வாறு செய்யும் போது எவ்வித எவ்வித சிகிச்சையும் இல்லாமல் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க: 8 மாதத்தில் கர்ப்பிணிகள் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும் இவை தான்
இதோடு மட்டுமின்றி கருமுட்டை வெளிவரும் நேரத்தில் பெண்களுக்கு உடல் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் சூடாக இருக்கும். காய்ச்சல், சளி போன்ற எவ்வித வைரஸ் பாதிப்புகளும் இல்லாமல் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். வீட்டில் தெர்மாமீட்டர் இருந்தால் உங்களின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது சோதித்துக் கொள்ள வேண்டும். இதோடு பெண்களுக்கு மார்பகம் கனமாக இருத்தல், அடி வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் ஓவலேசன் நேரம் என்பதைப் புரிந்துக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவது நல்லது.
இவற்றையெல்லாம் மேற்கொண்டாலும் கணவன் மற்றும் மனைவி இருவரும் மன உளைச்சல் இன்றி உடலுறவில் ஈடுபடும் போது எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஒராண்டு காலமாகியும் குழந்தைப் பிறக்கவில்லையென்றால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 35 வயதிற்குப் பின்னதாக திருமணம் ஆனவர்களுக்கு ஆறு மாத காலமாகியும் குழந்தை பிறக்கவில்லையென்றால் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆறு மாத காலத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com