herzindagi
image

பிரசவத்திற்குப் பின்னதாக ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா? 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்க போதும்

குழந்தைப் பெற்ற பிறகு சில பெண்களின் உடல் எடையில் பல மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக உடல் எடை அதிகரிக்கும். இவற்றைச் சமாளிக்க சில வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  
Editorial
Updated:- 2024-12-08, 13:55 IST

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது என்பது பொதுவான ஒன்றாக இருக்கும். ஆனால் குழந்தைப் பெற்ற பின்னதாக அதிகரித்த எடை அப்படியே இருக்குமோ? என்ற அச்சம் பெண்களிடம் அதிகளவில் ஏற்படக்கூடும். அதற்கேற்றால் போல் மருத்துவர்களும் குழந்தைப் பெற்ற பிறகு உடனடியாக எவ்வித உடற்பயிற்சிகளையும் செய்ய அனுமதிப்பதில்லை. குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள பெரியவர்களும் அனைத்து உணவுகளையும் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்கள். இதுவும் உடல் எடை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட சூழலில் அன்றாட வாழ்க்கை முறையில் சில வழிமுறைகளைப் பின்பற்றி உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.

குழந்தைப் பிறப்பிற்குப் பின் உடல் பருமனைக் குறைக்க வழிமுறைகள்:

நடைப்பயிற்சி:

குழந்தைப் பிறப்பிற்குப்பின்னதாக ஏற்படக்கூடிய உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்றால், கர்ப்ப காலத்தில் இருந்தே சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கர்ப்பிணிகளாலும் செய்ய முடியாது என்றாலும், கர்ப்ப காலத்தில் எவ்வித சிக்கல் இல்லாத கர்ப்பிணிகள் நடைப்பயிற்சி முதல் குனிந்து வளைந்து வேலைப் பார்ப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்ய வேண்டும். இதுபோன்ற பயிற்சிகள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உடலில் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைப்பதற்கு வழிவகுக்கும். குழந்தைப் பெற்ற பின்னதாகவும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு முடிந்தவரை சின்ன சின்ன வேலைகளைச் செய்வது நல்லது.

மேலும் படிக்க: இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு சிறுதானியங்களை ட்ரை பண்ணுங்க 

அதிக தண்ணீர் குடித்தல்:

நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைப் பிறந்த பின்னதாக தாய்மார்களுக்கு அதிக தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் வயிறு பெரிதாகிவிடும். உடல் பருமனோடு தொப்பையும் இருந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்குப் பிரச்சனையாக அமையும் என்பதால் தண்ணீரைக் குடிக்க சொல்லமாட்டார்கள். இத்தகைய செயல் முற்றிலும் தவறானது. பொதுவாகவே உடல் எடையைக் குறைக்க அதிக தண்ணீர் குடிக்க சொல்வது வழக்கம். இதுபோன்று தான் கர்ப்ப காலத்திற்குப் பின்னதாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கவும், கர்ப்பிணிகளுக்குத் தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்க உதவும்.

இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு:

கர்ப்பத்திற்குப் பின்னதாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைப்பதில் இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஒரு டம்ளர் தண்ணீரில் 2 முதல் 3 கிராம் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பது நல்லது.

கிரீன் டீ:

உடல் எடையைக் குறைக்கவும், சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த கிரீன் டீயை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் சர்க்கரை கலந்த கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க: குளிர்காலத்தில் இந்த 5 வகையான ஊறவைத்த விதைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது

சரிவிகித உணவுகள்:

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். இது தவறான செயல்முறை. எந்தளவிற்கு உணவு முறையில் ஆரோக்கியமான உணவுகள் அதாவது சரிவிகித உணவுகளை உட்கொள்கிறீர்களோ? அந்தளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

Image credit- Freepik

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com