herzindagi
image

8 மாதத்தில் கர்ப்பிணிகள் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும் இவை தான்

கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். அதுவும் 32 வாரம் அதாவது 8 மாதங்கள் ஆகிவிட்டால் அதீத அக்கறையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.  
Editorial
Updated:- 2025-02-06, 21:44 IST

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மகிழ்ச்சியானத் தருணங்களை மட்டுமல்ல, மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். ஆரம்ப கட்டத்தில் எப்போதும் போல் இருந்தாலும், 30 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டால் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைப் பிறப்பிற்கு இன்னும் சில வாரங்களே உள்ள 8 வது மாதத்தில் கர்ப்பிணிகள் சில விஷயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன? என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே

மேலும் படிக்க: Pregnancy Tips: கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

8 மாதத்தில் கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியது:

  • நன்றாக சாப்பிடுதல்: கர்ப்ப காலத்தில் பெரும் சவாலான மாதமான 8 மாதத்தில் கர்ப்பிணிகள் நன்றாக சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை சமச்சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தையின் வளர்ச்சிக்கான முக்கிய காலக்கட்டம் என்பதால் கர்ப்பபையில் நீர்ச்சத்துக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதிக நீர்ச்சத்தும் உடலுக்கு கேடு என்பதால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதோடு பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்

  • நீரேற்றத்துடன் இருத்தல்: தற்போது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால், எப்போதும் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிக்க முடியவில்லையென்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக 2 லிட்டர் அளவிற்காவது தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • இடது பக்கம் தூங்குதல்: 8 மாத காலம் தொ்டங்கிவிட்டாலே கர்ப்பிணிகள் எப்போது தூங்கினாலும் இடது பக்கமாக திரும்பி தூங்க வேண்டும். இவ்வாறு தூங்கும் போது குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடலுக்குப் போதுமான இரத்த செல்வதற்கு வசதியாக இருக்கும்.

  • அசைவுகளைக் கண்காணித்தல்: குழந்தைகளின் அசைவுகளைக் கண்காணிப்பது நல்லுது. வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அல்லது அசைவுகள் இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
  • சுறுசுறுப்பாக இருத்தல்: 8 மாத காலம் சோர்வாக இருக்கக்கூடும். இருந்தாலும் உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இது மனநிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
  • தயார் நிலையில் இருத்தல்: 32 வார காலங்கள் ஆகிவிட்டாலே குழந்தை எப்போது வேண்டுமானாலும் பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே பிரசவத்திற்குத் தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் ஸ்கேன் ரிப்போட்டுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • கால்களைக் குறைந்தது 30 நிமிடங்களுக்கு மேலே உயர்த்தி வைக்கவும். இதனால் கால்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்பில்லை.
  • ஒரே நேரத்தில் நீண்ட நேரம் உட்காருவதையோ அல்லது நிற்பதையோ தவிர்க்க வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க: கர்ப்ப கால சர்க்கரை நோய் பாதிப்பை தவிர்க்க இந்த உணவு குறிப்புகளை பின்பற்றுங்க

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதது: 8 மாத காலம் ஆகிவிட்டால் குனிந்து வளைந்து வேலை செய்யலாம். அதிக எடை தூக்குதல் உள்பட அதிக கனமான வேலைகளை செய்யக்கூடாது.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com