தாய்ப்பால் என்றைக்கும் தாய் மற்றும் குழந்தையின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இதில் பல நன்மைகள் இருக்கின்றது, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைக்கு போதுமாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகிறது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் அஞ்சிமா பாசுமதாரி தாஸ் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். அம்மாக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க: திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மணப்பெண்கள் ஒளிரும் சருமத்தை பெற டிடாக்ஸ் பானங்கள்
குழந்தை பிறந்து முதல் 24-48 மணி நேரத்தில் கிடைக்கும் தாய்ப்பாலில் இருந்து 48 மணி நேரத்திற்கு பிறகு உற்பத்தியாகும் தாய்ப்பாலில் இருந்து வேறுப்படுகிறது. முதல் 48 மணிநேர பால் கொலஸ்ட்ரம் என அழைக்கப்படுகிறது இதில் நிறைய ஆன்டிபாடிகள், அதிக கலோரிகள், மேலும் குழந்தையின் குடலில் காலனித்துவப்படுத்தும் நல்ல பாக்டீரியாக்களும் இதில் அடங்கும். இந்த நேரம் தான் தாய் மற்றும் குழந்தை பிணைப்பை மேம்படுத்தும் தருணம் தாய்ப்பால்.
தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்
- குழந்தைக்கு சரியான நேரத்தில் பாலூட்டும் போது கருப்பையின் ஊடுருவலுக்கு உதவுகிறது.
- தாய்ப்பால் இயற்கையான கருத்தடையாக செயல்படுகிறது.
- பிரசவத்திற்குப் பின் எடை இழப்புக்கு உதவுகிறது.
- மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வில் இருந்து பாதுகாக்கிறது.
- டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திலிருந்து தாய்மார்களைப் பாதுகாக்கிறது.
- மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு எதிராக நீண்ட கால பாதுகாப்பு கவசமான செயல்படுகிறது.
- பால் மாசு அல்லது வெப்பநிலை பற்றி கவலைப்படாமல் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு சீராக உணவளிக்கலாம்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்
- தாய்ப்பாலில் இயற்கையான ஆன்டிபாடிகள் உள்ளதால் குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
- தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான உகந்த ஊட்டச்சத்து உள்ளதால் குழந்தையின் அடுத்த அடுத்த வளர்ச்சிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குறைப்பிரசவ குழந்தைகளுக்கான தாய்ப்பாலில் அதிக புரதம் உள்ளதால் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவுகிறது.
- தாய்ப் பால் குழந்தையால் எளிதில் ஜீரணிக்கப்படுகிறது மற்றும் நெக்ரோடைசிங் என்டோரோகோலிடிஸ் என்றால் நோய் தொற்றுக்கான அபாயத்தைக் குறைக்கிறது.
- வயிற்றுப்போக்கு, சுவாச தொற்று, ஆஸ்துமா மற்றும் உடல் பருமன் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தாய்ப்பால் முக்கிய பங்கு வாகிக்கிறது.
- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் நடத்தை கோளாறுகள் இருக்கும் நிலையில் அதனை குறைக்க உதவுகிறது.
- தாய்ப்பால் வாரம் என்பது தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் செயல்முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு விழிப்புணர்வு காலமாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation