45 வயதுக்கு மேல் நிகழும் மாதவிடாய் நிறுத்தத்தில் உடலில் நிகழும் மாற்றங்களை சரிசெய்ய உதவும் உணவுகள்

மாதவிடாய் நிறுத்தம் நிலையில் பெண்கள் உடலில் பல மாற்றங்கள் நிகழும். இவற்றைக் குறைக்க உணவில் சில சிறப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டும்

 day diet plan for menopause

பெரிமெனோபாஸ் என்பது மாதவிடாய் நிற்கும் நேரம். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் நிற்கும் நேரத்தைச் சந்திக்க நேரிடும், இதனை பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெண்ணின் உடல் மாதவிடாய் நிறுத்தத்திற்குத் தன்னைத் தயார்படுத்தும் நேரம். இது மாதவிடாய் நிறுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த நேரத்தில் இனப்பெருக்க வயது முடிவடைகிறது. 45 முதல் 55 வயதிற்குள் பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பே ஒரு பெண்ணின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதேபோல மாதவிடாய் முடியும் நிலையிலும் அதவது மெனோபாஸ் தொடங்கும் போது பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு. அந்த நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரியும். இவற்றைக் குறைக்க உணவில் சில சிறப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மாதவிடாய் நிறுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

Chasberry tea inside

  • பெரிமெனோபாஸின் அறிகுறிகளைக் குறைக்க காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த இரண்டு கொடிமுந்திரிகளை சாப்பிடுங்கள். இது சூடான ஃப்ளாஷ்களைக் குறைக்கும்.
  • கொத்தமல்லி விதைகளின் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நன்மை பயக்கும். இதனால் உடலில் திரவம் தேங்குவது குறையும்.
  • மாலையில் சாஸ்பெர்ரி டீ குடிக்கவும். இது மார்பக மென்மையை குறைக்க உதவி செய்கிறது.சூடான ஃப்ளாஷ்கள், மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் மென்மையான மார்பகங்கள் ஆகியவை மாதவிடாய் நிறுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
  • இரவில் ஊறவைத்த திராட்சை தண்ணீர் குடிக்கவும். இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க முடியும்.
  • பல சமயங்களில் பீரியட்ஸ் நிற்கும் நிலையில் அவ்வப்போது மற்றும் அதிக வலியுடன் இவை செயல்படும்.
women inside
  • மாதவிடாய் நிற்க்கும் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, கோபம், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. மனநிலையை மேம்படுத்த, மாலையில் வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
  • அரைத்த ஆளி விதை கலந்த தண்ணீரை மத்திய உணவின் போது குடிக்கவும்.
  • ஊறவைத்த வால்நட் 2 துண்டுகளை காலையில் சாப்பிடுங்கள். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் சூடான ஃப்ளாஷ்கள் மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறைக்கிறது.

மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்க உங்கள் உணவில் இந்த மாற்றங்களைச் செய்யுங்கள். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP