திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மணப்பெண்கள் ஒளிரும் சருமத்தை பெற டிடாக்ஸ் பானங்கள்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் டிடாக்ஸ் பானங்கள் சிறந்தவை. இயற்கையாகவே பளபளப்பான சருமத்திற்கு சில பானங்கள் பற்றி பார்க்கலாம்

Detox drink for skin whitening

டிடாக்ஸ் பானங்கள் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரம் மற்றும் அன்றாட வழக்கத்தில் சேர்க்கும் சிறந்த பானமாக இருந்து வருகிறது. குறிப்பாக மணப்பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை டிடாக்ஸ் பானம் தருகிறது. அவை குடலில் நச்சுக்களை நீக்கி இயற்கையான சரும சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. மணப்பெண்களுக்கு குர்கானின் சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் தன்யா மெஹ்ராவிடம் பேசினோம், அவர் உணவில் சேர்க்கக்கூடிய சில ஆரோக்கியமான டிடாக்ஸ் பான ரெசிபிகளைப் பரிந்துரைத்தார்.

மணப்பெண்களுக்கு டிடாக்ஸ் பானங்கள்

எலுமிச்சை மற்றும் இஞ்சி டிடாக்ஸ் பானம்

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி எலுமிச்சையில் வைட்டமின் சி, பாலிபினால்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளதால் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவி செய்கிறது. இஞ்சி மண்ணுக்கு அடியில் எடுக்கப்படும் ஒரு வேர்த்தண்டுக்கிழங்கு ஆகும். இது பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எலுமிச்சை மற்றும் இஞ்சி டிடாக்ஸ் பானம் உடலை ஹைட்ரேட் செய்து சுத்தப்படுத்த ஒரு புத்துணர்ச்சியூட்டும் வழியாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. அதே நேரத்தில் வெள்ளரி நீரேற்றம் மற்றும் குளிர்ச்சியான விளைவை வழங்குகிறது. புதினா இலைகள் புத்துணர்ச்சியை சேர்க்கின்றன மற்றும் அவற்றின் செரிமான நன்மைகளுக்காக அறியப்படுகின்றன. கடல் உப்பு எலக்ட்ரோலைட்களை சமப்படுத்த உதவுகிறது. நீங்கள் நீரேற்றமாகவும், ஆற்றலுடனும் இருப்பதை உறுதிசெய்கிறது.

எலுமிச்சை மற்றும் இஞ்சி டிடாக்ஸ் பானத்திற்கு தேவையான பொருட்கள்

lemon drink inside

  • 1 லிட்டர் தண்ணீர்
  • 1 எலுமிச்சை
  • 1 அங்குல புதிய இஞ்சி துண்டு
  • 1 வெள்ளரி
  • புதிய புதினா இலைகள்
  • ஒரு சிட்டிகை கடல் உப்பு

செய்முறைகள்

  • ஒரு பெரிய பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நிரப்பவும்.
  • நறுக்கிய எலுமிச்சை, இஞ்சி மற்றும் வெள்ளரி சேர்க்கவும்.
  • புதிய புதினா இலைகளை போடவும்.
  • ஒரு சிட்டிகை கடல் உப்பு சேர்க்கவும்.
  • நன்கு கலக்கி குறைந்தது 4 மணிநேரம் குளிரூட்டப்பட வேண்டும்.
  • ஒரு கிளாஸில் ஊற்றி குடித்து பாருங்கள், நாள் முழுவதும் மகிழுங்கள்.

ஜீரா நீர்

உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய மற்றொரு பயனுள்ள பானம் ஜீரா நீர். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் செரிமானம், எடை இழப்பு, நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அதை எவ்வாறு தயார் செய்யலாம் என்பது இங்கே:

  • ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • காலையில் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
  • கூடுதல் சுவைக்கு சிறிது எலுமிச்சையை பிழியலாம் அல்லது சிறிது தேன் சேர்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் புதினாவுடன் தேங்காய் தண்ணீர்

green drink inside

தேங்காய் நீர் ஒரு சிறந்த எடை இழப்பு பானமாகும். மேலும் எலுமிச்சையுடன் சேர்ந்து இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை ஏற்படுத்த உதவுகிறது. தேங்காய் நீர் டிடாக்ஸ் பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

  • தேங்காய் தண்ணீரை எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை மற்றும் புதினா சேர்க்கவும்.
  • அவற்றை நன்கு கலந்து, காலையில் உட்கொள்ளவும்

இயற்கையான பளபளப்பிற்கு இந்த டிடாக்ஸ் பானங்களை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP