தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான விலைமதிப்பற்ற பிணைப்பை ஏற்படக்கூடிய ஒரு விஷயம் என்றால் தாய்ப்பால் தவிர வேறொன்றும் இல்லை. குழந்தைப் பிறந்தவுடன் கொடுக்க ஆரம்பிக்கும் தாய்ப்பால், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படக்கூடிய ஆற்றலை அளிக்கும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுவார்கள். இதனால் தான் எக்காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடக்கூடாது என்பார்கள். அந்தளவிற்கு குழந்தைகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தாய்ப்பாலை கொடுக்கும் போது ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பார்கள். இவை குழந்தைகளுக்கு எவ்வித நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதோ அவற்றில் சில உங்களுக்காக.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டியவை:
தினமும் ஆடைகளை மாற்றுதல்:
தாய்ப்பால் கொடுக்கும் போது சில நேரங்களில் பால் கசிந்து தாய்மார்களின் ஆடைகளில் கொட்ட நேரிடும். இதனால் பாக்டீரியா தொற்று மற்றும் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க அவர்களின் ஆடைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். எனவே ஆடைகளை தினமும் மாற்றும் போது குழந்தைகளின் மென்மையான தோலில் எரிச்ச்ல மற்றும் தொற்று பாதிப்புகள் ஏற்படாது.
வாசனை பொருட்களைத் தவிர்க்கவும்:
தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகங்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக தொடர்பு இருக்கும். இந்த நேரங்களில் தாய்மார்கள் வாசனை திரவியங்கள், தோல் எரிச்சல், சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க வேண்டும் என்றால், தாய்ப்பால் கொடுப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். மேலும் ஒவ்வொரு தாயும் தினமும் மார்பக பம்புகளை சுத்தம் செய்வது நல்லது, இதனால் அவை பாக்டீரியா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவியாக இருக்கும்.
நர்சிங் ப்ராக்களைப் பயன்படுத்துதல்:
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ப்ராக்களை உபயோகிக்கவும். பால் கொடுப்பதற்காகவே உள்ள ப்ராக்களைப் பயன்படுத்தும் போது தொற்று பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். குறிப்பாக மார்பகங்களைக் கையால் தொடும் வாய்ப்புகள் குறைவு. இதனால் குழந்தையின் வாய்க்கு கிருமிகள் பரவும் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப சுவாசிக்கக்கூடிய துணிகள் மற்றும் ப்ராக்களைப் பயன்படுத்துவது நல்லது.
தாய்ப்பால் கொடுக்கும் முன் கைகளை கழுவுதல்:
உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் எப்போதும் சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் கைகளை கழுவ வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது கிருமிகள் பரவுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதுபோன்ற முறைகளில் உங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஒருவேளை மார்பக பகுதியில் சிவத்தல், எரிச்சல், தோல் சிவத்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation