தமிழகத்தில் பொதுத்தேர்வு நெருங்கும் சூழலில் மாணவர்கள் அதை எதிர்கொள்ள சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர். சுட்டித்தனமாக இருக்கும் மாணவர்களை பார்த்து பெற்றோர் உனக்கு பதிலா நான் தான் தேர்வு எழுதனும் போல, நீ பாஸ் ஆகுற மாதிரி தெரியல எனக் நம்பிக்கையின்றி கூறுவதுண்டு. நீங்கள் பெற்றோராக தேர்வு எழுத முடியாது. ஆனால் உங்கள் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெற சில விஷயங்களை செய்யலாம்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நினைவுத்திறன் மிகவும் முக்கியமானது. எவ்வளவு தான் படித்திருந்தாலும் தேர்வு அறையில் கேள்விக்கான பதில் ஞாபகத்தில் வரவில்லை என்றால் தோல்வியடைய வேண்டியது தான். எனவே பிள்ளைகளின் ஞாபக சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரித்திட பெற்றோராக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
மூளைக்கு பயிற்சி
மூன்று நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும் என்றால் பிள்ளைகளின் ஞாபக சக்தியைக் கூர்மைப்படுத்துவது அவசியம். சுடோகு அல்லது குறுக்கெழுத்து புதிர்கள் போன்ற மூளையை சிந்திக்க வைக்கும் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்வது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்.
தொடர் பயிற்சி
உங்கள் பிள்ளை எதையாவது கற்றுக் கொள்ளும்போது, அதை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளை சத்தமாகப் படிப்பதை ஊக்குவிக்கவும். படிப்பதை எழுதியபடியே சத்தமாக வாசிக்கும்படி உங்கள் பிள்ளையிடம் அறிவுறுத்துங்கள்
சுருக்கெழுத்து
நீண்ட வாக்கியங்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருந்தாலும் அதை உடைத்து படித்தால் எளிதாகிவிடும். உதாரணமாக வானவில் வண்ணங்களைக் கற்றுக்கொள்வது. ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை சுருக்கெழுத்தாக vibgyor என நினைவில் கொள்கிறோம். அது போல கடினமான வாக்கியங்களை சுருக்கெத்தாக மாற்றி நினைவில் கொள்ளவும்.
மேலும் படிங்கதேர்வுக்கு தயாராகும் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய உதவிகள்
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது கற்றல் மற்றும் நினைவாற்றலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரோபிக் உடற்பயிற்சி மூளைக்கு மிகவும் நல்லது. காலையில் உங்கள் பிள்ளைகள் எழுந்தவுடன் சிறிது நேரம் பயிற்சி செய்ய அறிவுறுத்துங்கள்.
தண்ணீர் குடிப்பது
நமது மூளை பெரும்பாலும் தண்ணீரால் ஆனது தெரியுமா? லேசான நீரிழப்பு மூளை சுருக்கம் மற்றும் நினைவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வைக்கவும்.
சரியான தூக்கம்
தேர்வெழுதும் மாணவன் நன்றாக தூங்கவில்லை என்றால் நினைவாற்றல், படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன் என அனைத்தும் பாதிக்கப்படும். தினமும் எட்டு மணி நேர உறக்கத்தை உறுதி செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முட்டைக்கோஸ், கீரை மற்றும் ப்ரோக்கோலியில் வைட்டமின் கே, லுடீன், ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற மூளை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சோதனை
உங்களது பிள்ளையின் பையில் தேர்வுக்கு தேவையான பொருட்கள், கால்குலேட்டர், ஹால் டிக்கெட் உள்ளதா என்பதை நீங்களும் சோதனை செய்துவிடுங்கள். இறுதிநேரத்தில் அவர்களை பதற்றம் அடைய விட வேண்டாம். இறுதிநேர பதற்றம் அவர்களின் நினைவாற்றலை பாதிக்கும்.
நெரிக்க வேண்டாம்
தேர்வெழுதும் மாணவரை எந்தவித நெரிசலுக்கும் ஆளாக்காமல் இருசக்கர வாகனத்திலேயே தேர்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள். பயணிக்கும் போது நிறைய பேசாமல் மகிழ்ச்சியான விஷயங்களை கூறி அவர்களை அன்பாக தேர்வறைக்கு அனுப்பி வைக்கவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation