தேர்வுகள் வரும்போது சிரமப்படுவது மாணவர்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும் தான். அந்த நேரத்தில் உருவாகும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குழந்தையின் உடல்நலத்தையும், தேர்வுக்குத் தயாராகும் முறையையும் பாதிக்கும். இதனால் தேர்வு காலத்தில் குழந்தையை மன அழுத்தமின்றி வைத்திருப்பது பெற்றோரின் பங்கு.
தேர்வு காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நிர்வகிப்பதில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவிட வேண்டும் என்பதில் பல பெற்றோர் தோல்வியடைந்து விடுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றால் போதும் என்றே பெற்றோர் நினைக்கின்றனர்.
தேர்வுக்குத் தயாராவதில் தொடங்கி அதை எழுதி முடிக்கும் வரை மன அழுத்தத்தினால் குழந்தைகளின் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை மன அழுத்தம் இல்லாமல் வைத்திருக்கச் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளோம்.
அமைதியான சூழல் :
தனது குழந்தை நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருப்பதால், குழந்தையைவிடப் பெற்றோருக்கு அதிக மன அழுத்தம் உண்டாகலாம். இதைக் குழந்தையிடம் வெளிப்படுத்தி அசாதாரண சூழலை உருவாக்காமல், அமைதியாக இருந்து குழந்தையின் மீது கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதுடன், அவர்கள் படிப்பதற்கு ஏற்றச் சூழலை ஏற்படுத்த உறுதிப்படுத்தவும்.
தேர்வுக்கான திட்டமிடல் :
குழந்தைகளுடன் அமர்ந்து தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என யோசித்து ஒரு திட்டத்தைப் பெற்றோர் உருவாக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்வது அவசியம். இது குழந்தைகளின் படிக்கும் நேரத்தையும், ஓய்வு நேரத்தையும் சரியாக அமைக்க உதவும். குழந்தைகளுக்குச் சவாலாக இருக்கும் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
சமூக ஊடகங்களைத் தவிர்த்தல் :
தேர்வுகள் முடியும் வரை சமூக ஊடங்களின் பயன்பாட்டைக் குறைத்து குழந்தைகள்மீது கவனம் செலுத்துவது அவசியம். நல்ல விஷயங்களைக் கூறி குழந்தைகளை இயல்பாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை அறிந்து சரி செய்யுங்கள்.
சத்தான உணவு & போதுமான உறக்கம் :
தேர்வு காலத்தில் குழந்தைகள் சத்தான உணவுகளைச் சாப்பிடுகிறார்களா, போதுமான நேரம் உறங்குகிறார்களா எனப் பெற்றோர் கவனிக்க வேண்டும். சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் குழந்தைகளின் கவனம் சிதறும்.
யதார்த்த மனநிலை :
குழந்தையின் திறனை நன்கு அறிந்த பெற்றோர் , குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே செயல்படுவார்கள். மதிப்பெண்களை மட்டுமே வைத்துக் குழந்தைக்குக் குடைச்சல் கொடுக்கக் கூடாது.
Image source: google, freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation