பெண்களே.பணத்தைச் சேமிப்பதில் சிரமமா? இந்த வழிமுறைகளைப் பாலோ பண்ணுங்க!

நிரந்தர வைப்புத் தொகை, தொடர் வைப்புத்தொகை, பிபிஎப், செல்வமகள் திட்டம், கண்மணி சேமிப்புத்திட்டம் போன்றவற்றிலும் பணத்தை சேமிக்கலாம். 

women saving plan
women saving plan

இன்றைய காலகட்டத்தில் நிதி சுதந்திரம் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் இருக்க வேண்டும். குடும்பத் தேவைகள் முதல் குழந்தைகளின் குழந்தை செலவுகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது வரை பெண்களின் நிதி தான் பெருமளவில் உபயோகமாகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களிடம், சேமிக்கும் பழக்கம் அரவே இல்லை. இதனால் தான் அதிகம் சம்பாதித்தாலும் , குறைவாகச் சம்பாதித்தாலும் அதில் ஒரு பங்கைக் கட்டாயம் சேமிக்க வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுவரை எப்படி இருந்தீர்களோ? கவலையில்லை, இனி மேலாவது சேமிக்கும் பழக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ பணத்தை எப்படிச் சேமிக்க முடியும்? என்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கே உங்களுக்காக.

saving tips ()

பணத்தைச் சேமிக்கும் வழிமுறைகள்:

  • பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தால், முதலில் வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் செலவுகளைக் குறைக்க வேண்டும். தேவையில்லாமல் எவ்வித செலவுகளையும் செய்யக்கூடாது. ஒருவேளை அப்படிச் செய்தாலும் மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க முடியும்..
  • பெண்கள் கட்டாயம் எது ஆடம்பரம் மற்றும் எது அத்தியாவசிய செலவுகள் என்பதை முதலில் ஆராய்ந்துக் கொண்டு, அதற்கேற்ப பொருள்களை வாங்க முயற்சிக்கவும்.
  • ஒவ்வொருவரின் குடும்பத்திலும் வருமானத்திற்கு அதிகமாகவே செலவுகள் அதிகமாகும். இதற்காகக் கடன்கள் வாங்க வேண்டும் என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும். வரவுகளுக்கு ஏற்ற செலவுகள் செய்யும் போதும் பணப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை.
  • மாதந்தோறும் தேவையில்லாமல் துணிகள் வாங்குவது போன்ற செயல்பாடுகளைக் குறைக்க வேண்டும்.
  • தற்போது மின்சார கட்டணம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. எதிர்பார்க்காததை விட மாதந்தோறும் அதிகளவில் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே உங்களது அறைகளில் தேவையில்லாமல் எரியும் மின் விளக்குகள், மின் விசிறிகளை அணைப்பது நல்லது.
  • வீடுகளில் பிறந்த நாள் போன்ற சிறிய அளவிலான சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றால் உணவகங்களில் ஆர்டர் செய்யக்கூடாது. முடிந்தவரை வீடுகளில் சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
  • இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளைக் குறைக்கும் முயற்சிகளின் மூலம் உங்களின் சேமிப்பை அதிகரிக்கலாம். இதோடு வங்கி அல்லது தபால் நிலையங்களில் நிரந்தர வைப்புத் தொகை, தொடர் வைப்புத்தொகை, பிபிஎப், செல்வமகள் திட்டம், கண்மணி சேமிப்புத்திட்டம் போன்றவற்றைத் தொடங்கி சிறிய தொகையை சேமிக்கலாம்.
housewife savings plan

பெண்கள் தங்க நகை சேமிப்புத்திட்டம், மகளிர் குழுவின் மூலம் சேமிப்பது, ஏலச்சீட்டு போன்றவற்றில் உங்களது பணத்தை முதலீடு செய்து சேமிக்க முயற்சி செய்யவும். நிச்சயம் இது போன்ற நடைமுறைகள் பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP