குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் கிடைக்கக்கூடிய வரம். 9 மாத காலங்கள் அதாவது 37 வார காலம் கருவில் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தைகளை அரவணைத்து வளர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு தாய்மார்களுக்கும் உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக பிறக்கும் குறை மாத குழந்தைகளை அதீத கவனத்துடன் பராமரிப்பது வ்வொரு பெற்றோர்களுக்கும் மிகவும் சவாலானது. இதோ குறைப்பிரச குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
குறைப்பிரசவ குழந்தைகள்:
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமாரட 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கிறார்கள் என்றும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உரிய காலததிற்கு முன்னதாக பிறக்கும் குழந்தைகளின் உள் உறுப்புகள் முழுமையான வளர்ச்சியடையாமல் இருப்பதால் அடிக்கடி அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். மருத்துவமனையின் இருக்கும் போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அதே சமயம் வீட்டிற்கு அழைத்து வரும் போது கூடுதல் பாதுகாப்பு தேவை என்பதை ஒவ்வொரு பெற்றொர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளைப் பராமரிப்பு எப்படி?
- குறைமாத காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. இந்த குழந்தைகள் தாயிடமிருந்து தாய்ப்பால் குடிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அப்படி அவர்களால் குடிக்க முடியவில்லையென்றாலும் தாய்ப்பாலை தனியாக எடுத்து கொடுக்க வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- மருத்துவமனையில் இருக்கும் போது குழந்தைகளுக்குத் தேவையான வெப்பநிலையை சரியாக பார்த்துக் கொள்வார்கள். இதையே நீங்கள் வீட்டிலும் பின்பற்ற வேண்டும். குறை பிரச குழந்தைகளை வீட்டில் இருந்தே பராமரிக்கும் போது வெப்பநிலையை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5-37.0 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும்.

- கருவில் இருந்து சீக்கிரம் வரக்கூடிய குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். எனவே கங்காரு பராமரிப்பு முறையை தாய்மார்கள் பின்பற்ற வேண்டும். கங்காரு தன் குட்டியை எப்படி தன்னுடனே வைத்திருக்குமோ?அதை போன்று தான் தாய்மார்கள் மார்புக்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது இதயம் மற்றும் சுவாச விகிதத்தை உறுதிப்படுத்தும்.
- குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும் போது, மூளை மற்றும் உடல் வளர்ச்சி வேகமாகும். இதனால் குழந்தைகள் தூங்குவதற்கு ஏதுவாக உகந்த வெப்பநிலை, குறைந்த வெளிச்சம் மற்றும் எவ்வித சத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

- குறைப்பிரசவ குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அவர்களை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து யார் பார்க்க வந்தாலும் முடிந்தவரை அவர்களை அனுமதிக்காதீர்கள். ஒருவேளை குழந்தைகளைப் பார்த்து ஆக வேண்டும் என்று உங்களைக் கட்டாயப்படுத்தினால் கை மற்றும் கால்களை நன்கு தண்ணீரால் கழுவிய பின்னதாக உள்ளே அனுமதிக்கவும். தூக்குவதற்கு அனுமதிக்க வேண்டாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation