சுயமரியாதை பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா?

ஒவ்வொரு பெண்களுக்கும் பழைய அனுபவங்களின் அடிப்படையில் தான் சுய மரியாதை அதிகரிக்கும். 

self esteem strength
self esteem strength

பெண்கள் எப்போதும் சுய மதிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த உலகத்தில் அவர்கள் நினைத்தப்படி எந்தவொரு பணியையும் முறையாக செய்ய முடியாது. ஆம் தன்னம்பிக்கையுடன் இருந்தாலே எதையும் சாதித்துவிடலாம். ஆனால் தன்னுடைய மதிப்பை அறியாமல் எந்த முயற்சி செய்யாமல் இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் பல தோல்விகளைத் தான் சந்திக்க நேரிடும்.

குறிப்பாக பெண்கள், மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்களா? அல்லது மரியாதையுடன் நடத்துக்கிறார்களா? என்பதில் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக நம்மை நாம் எப்படி மரியாதையுடன் நடத்துக்கிறோம் என்றும் நம்முடைய முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம்? என்பது பற்றிய தேடல்கள் இருந்தால் பெண்களின் சுய மதிப்பும், மரியாதையும் தானாக வந்துவிடும். அதைவிட்டு விட்டு சமூகம் சொல்வதைக் கேட்டு, என்னால் எதையும் செய்ய முடியாது என்று எந்த விஷயத்திற்கும் பின் வாங்கக்கூடாது. மனதளவில் சுயமரியாதை வளர்ந்துவிட்டால், மற்றவர்களின் ஏளனம் இருக்காது. சமூகத்திலும் சுய மரியாதையுடன் வாழ முடியும். இதற்கு என்ன செய்வது என்ற எண்ணம் ஏற்படுகிறதா? இதோ சுய மரியாதை வளர்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

self esteem for women

பெண்களின் சுயமரியாதை அதிகரிக்க நடவடிக்கைகள்:

  • ஒவ்வொரு பெண்களுக்கும் பழைய அனுபவங்களின் அடிப்படையில் தான் சுய மரியாதை அதிகரிக்கும். எனவே வாழ்க்கையில் எவ்வித தோல்விகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகருங்கள். உங்களால் அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும் என்ற மனநிலையும் இருந்தால் போதும்.
  • அலுவலகம் அல்லது வீடுகளில் பெண்களை எப்போதும் தாழ்ந்துப் பேசுவது வழக்கமாகிவிட்டது. இந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். இதற்கு நீங்கள் பணியாற்றும் துறைகளில் எப்போதும் முதன்மை வாய்ந்த நபராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். உங்களின் அறிவுத்திறனை அந்தந்த துறைகளில் வளர்த்துக் கொள்ளுங்கள். இதைச் செய்தால் போதும். மக்கள் உங்களை மதிப்புடன் நடத்துவார்கள்.
  • பெண்கள் தங்கள் தொழில் முன்னேற்றத்தில் முதலீடு செய்வதும்,அதில் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்தால் போதும் அவர்களின் சுய மதிப்பு அதிகரிக்கும்.
  • எந்தவொரு சூழலிலும் உங்களின் சுயமரியாதை மட்டும் யாரிடம் விட்டுக் கொடுக்கக்கூடாது. குறிப்பாக பெண்களை ஏளனமாக பேசும் இந்த சமூகத்தில் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் போது உங்களது தன்னம்பிக்கையை நீங்களே இழக்க நேரிடும்.
  • பெண்களின் முதலாளித்துவத்தை விரும்பாத சமூகத்தில் சுய மரியாதையும் இருக்காது. உங்களைக் கீழே இழுக்க முயற்சி செய்யும் நபர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள். நிச்சயம் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதால் முயற்சியை ஒருபோதும் விட்டு விடாதீர்கள்.

cofident women
  • தங்கள் வேலையில் நூறு சதவீதம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதில் தவறில்லை. அதனால் மற்ற காரியங்கள் கெட்டுவிடக்கூடாது. நூறு சதவீத நேர்த்தி, ஒழுங்கு இல்லாவிட்டாலும் ஒரு வேலையை கச்சிதமாக செய்ய முடியவில்லையே என்று எதிர்மறை சிந்தனைகளை வளர்க்கக் கூடாது. இது உங்களின் தன்னம்பிக்கையை இழக்க செய்யும்.

Image Source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP