herzindagi
image

Today's Gold Rate in Chennai 18, 22 and 24 Carat: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம், வெள்ளி விலை; வாடிக்கையாளர்கள் கவலை

Today Gold Rate: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 200-க்கும் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.
Editorial
Updated:- 2025-12-11, 12:18 IST

Today Gold Price: இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்திருப்பதால், சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்:

 

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நிலையாக இருப்பதற்கு தற்போதைய சூழலில் வாய்ப்பு இல்லை. இவை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தங்க நகை வாங்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.

 

24 கேரட் தங்கத்தின் விலை:

 

இன்று சென்னையை பொறுத்தவரை, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 22 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ. 13,124 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 24 கேரட் தங்கம், இன்று ரூ. 13,146 என விற்பனை ஆகிறது. மேலும், 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,05,168 எனவும், 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,31,460 எனவும், 100 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,14,600 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: இனி வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட கடைக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே நகையை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்

 

22 கேரட் தங்கத்தின் விலை:

 

ஆபரண தங்கமான 22 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ரூ. 20 அதிகரித்துள்ளது. இதனால், நேற்று ரூ. 12,030 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 22 கேரட் தங்கம், இன்று ரூ. 12,050 என விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 96,400 எனவும், 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,20,500 எனவும், 100 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 12,05,000 எனவும் விற்பனை ஆகிறது.

Today Gold Price

 

18 கிராம் தங்கத்தின் விலை:

 

இவை மட்டுமின்றி 18 கிராம் தங்கத்தின் விலையும் ரூ. 15 உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்று 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,045 எனவும், 8 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 80,360 எனவும், 10 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,00,450 எனவும், 100 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,04,500 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: தங்கத்தில் இவ்வாறு முதலீடு செய்வதால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறதா!

 

இன்றைய வெள்ளி விலை நிலவரம்:

 

தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று வெள்ளி விலை ரூ. 2 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ. 209 என விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது, பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Gold Price Update

 

தங்கம் என்பது முன்னர் இருந்த காலத்தில் ஆடம்பர நகையாக மட்டுமே கருதப்பட்டது. ஆனால், தற்போது அதனை முதலீடாகவும், சேமிப்பாகவும் பலர் பார்க்கின்றனர். இந்த சூழலில், நகை வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றன.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com