herzindagi
gold jewlery  shining

தங்க நகைகள் எப்போதும் போல புதிதாக தெரியணுமா? இதோ உங்களுக்கான சில ஐடியாக்கள்!

தங்க நகைகளை சுத்தம் செய்யும் போது கொதிக்கும் சூடான தண்ணீரையோ? அல்லது குளிர்ந்த நீரையோ? பயன்படுத்தக்கூடாது.
Editorial
Updated:- 2024-07-22, 15:35 IST

தங்க நகைகளையும் பெண்களையும் எப்போதுமே பிரிக்க முடியாது. அந்தளவிற்கு அதீத நெருக்கத்துடன் இருப்பவர்கள் என்றே கூறலாம். ஒவ்வொருவரின் வீட்டிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்க நகைகள் நிச்சயம் இருக்கும். தங்க நகைகள் ஆடம்பரத்திற்காக பார்க்கப்பட்டாலும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றாகவும்  மாறிவிட்டன. ஆம் அவசர தேவைகளுக்கு மற்றவர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்ப்பதற்கு தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெறக்கூடிய சூழல் அதிகரித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்த சூழலில் நம்மிடம் உள்ள நகைகளையாவது பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பானது மட்டுமல்ல, தங்க நகைகளை எப்போதும் புதிது போன்று ஜொலிப்புடன் வைத்திருக்க வேண்டும். இதற்காக நீங்கள் கடைகளுக்குச் சென்று தான் பாலிஷ் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தியும் தங்க நகைகளை எப்போதும் ஜொலிப்புடன் வைத்திருக்க வேண்டும். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே.

 gold jewellery and women

மேலும் படிக்க: பணப் பிரச்சனையிலிருந்து விடுபடக் கற்பூரத்துடன் இந்த 3 பொருட்களை எரிக்கவும்

தங்க நகைகளைப் பராமரிக்கும் முறைகள்:

  • தங்க நகைகளை இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது பல் துலக்கும் பரஷ்ஷைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
  • தங்க நகைகளை சுத்தம் செய்வதாக இருந்தால் முதலில் வெதுவெதுப்பான நீரில், சோப்பு, சமையல் பாத்திரங்களை துலக்கப் பயன்படுத்தும் லிக்யூட் ( திரவம்) போன்றவற்றைக் கலந்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் சுத்தம் செய்யவிருக்கும் தங்க நகைகளை சுமார் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் பச்சை தண்ணீரைப் பயன்படுத்தி அலசிக் கொண்ட பின்னதாக காட்டன் துணியைக் கொண்டு துடைத்தெடுக்கவும். புதிய நகைகளைப் போன்று தோற்றமளிக்கும். இந்த நடைமுறை அவ்வப்போது மேற்கொள்ளும் போது எப்போதும் தங்க நகைகள் புத்தம் புதிதாக இருக்கும்.
  • அதிகமாக அழுக்குப் படிந்துள்ள நகைகளை சுத்தம் செய்வதற்கு டூத் பிரஷ் அல்லது பெயின்ட் அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறிய ப்ரஷ்ஷைக் கொண்டு சுத்தப்படுத்தவும். லேசாக துடைத்தெடுத்தால் போதும். அதிக அழுத்தமாக தேய்க்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

gold wash

  • இதுபோன்ற முறைகளைப் பின்பற்றி உங்களது நகைகளை சுத்தம் செய்யலாம். அதே சமயம்  அனைத்து நகைகளுக்கு இத்தகைய நடைமுறை பொருந்துமா? என்றால் நிச்சயம் இல்லை. இதோ அதற்கான டிப்ஸ்களும் உங்களுக்காக.

மேலும் படிக்க: நெருங்கும் மழைக்காலம்; குழந்தைகளைப் பாதுகாக்கும் முறைகள்!

பின்பற்றக்கூடாதது?

  • தங்க நகைகளை சுத்தம் செய்யும் போது கொதிக்கும் சூடான தண்ணீரையோ? அல்லது குளிர்ந்த நீரையோ? பயன்படுத்தக்கூடாது.

stone gold jewel

  • கல் வைத்த நகைகளை அணிவது பல பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் என்ன? நாள் ஆக ஆக கற்களின் பளபளப்பு குறைந்துவிடும். இதற்காக மேற்கூறிய செய்முறைகளைப் போன்று செய்யக்கூடாது. குறிப்பாக ப்ரஷ்களைக் கொண்டு அதிகமாக தேய்க்கக்கூடாது. இதனால் கற்களின் ஜொலிக்கும் திறன் குறைந்துவிடும். நகைக் கடைகளில் பாலிஷ் செய்வதற்குக் கொடுத்துவிடுவது நல்லது.

Image source - Google 

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com