அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்; பாதுகாப்புடன் வளர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது?

வெளி நபர்களுடன் பேசும் போது யாரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது. இதனால் பல பிரச்சனைகள் குழந்தைகள் சந்திக்க நேரிடும்.

children safety tips

குழந்தைகளுக்கான எதிரான பாலியல் வன்முறைகளும், கடத்தல் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்ன தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் குழந்தைகளுக்கான எதிரான பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. எனவே தான் பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெரும் அக்கறை காட்ட வேண்டும். பாதுகாப்புடன் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளைப் பாதுகாப்புடன் வளர்க்க பெற்றோர்கள் என்னவெல்லாம் என்பது குறித்த பயனுள்ள தகவல்களை இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

baby care ()

  • முதலில் நம்முடைய குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை வளர்க்க வேண்டும். அது வீடும், குடும்பமுமாக இருந்தால் நல்லது. ஆனால் இது எப்போதும் நடப்பதில்லை. வீட்டிற்குள் சண்டை, சச்சரவுகள், உறவினர்களுடன் பொறாமை போன்ற பல விஷயங்களை சிறு வயதில் இருந்தே அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மனதைப் பாதிக்கிறது. இதனால் தான் எங்கு சந்தோஷம் இருக்கிறது என்று நினைக்கிறார்களா? அவர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பிப்பார்கள். எனவே இவற்றை முதலில் மாற்ற வேண்டும்.
  • அடுத்தப்படியாக பள்ளி, கல்லூரி மாணர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வைப்பது, புதிய புதிய தற்காப்பு கலைகளைக் கற்றுக கொடுப்பது நல்லது தான். அதே சமயம் இந்த இடத்தில் அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறீர்களா? என்பதை அவ்வவ்போது கண்காணிக்க வேண்டும்.
  • அம்மா, அப்பா இருவருமே பணிக்குச் செல்லும் காலம் இது. அப்படி செல்லும் போது கதவுகளை பூட்டிக் கொண்டு செல்வதால் அவர்களின் பாதுகாப்பு குறைகிறது. மொபைலிலும் அதிக நேரம் செலவிட நேரிடும் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் விட்டு செல்வது நல்லது.
  • தேவையில்லாமல் மணிக்கணக்கில் டிவி, இன்டர்நெட், போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை அவர்கள் மொபைல் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடன் பெற்றோர்களும் நேரத்தைச் செலவிட முயற்சி செய்யவும்.
  • ஆண் பிள்ளைகளோ? பெண் பிள்ளைகளோ? பெண்களுக்கு நல்ல தொடுதல் ( good touch), தவறான தொடுதல் ( Bad touch) குறித்து சொல்லிக் கொடுக்கவும்.
  • குழந்தைகள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வரும் போது ஒரே மாதிரியான மனநிலையில் தினமும் வருகிறார்களா? என்பதைக் கண்காணிக்கவும். முகத்தில் சோகம் மற்றும் பழகும் விதத்தில் மாற்றம் இருக்கிறாதா? என்பதை தினமும் கவனிப்பது நல்லது.
save girl child
  • இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டது என்பது சரியான கூற்று தான். அதற்காக நம்முடைய ஆடை விஷயங்களில் அதைப் புகுத்தக்கூடாது. நமக்கு எது அழகாக இருக்குமோ? ஆபாச தெரியாதா? அதுபோன்ற ஆடைகளை உடுத்துவதற்கு சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • வெளி நபர்களுடன் பேசும் போது யாரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது. இதனால் பல பிரச்சனைகள் குழந்தைகள் சந்திக்க நேரிடும். எனவே ஒரு சந்தேக நோக்கத்துடன் எதையும் உற்றுநோக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும்.
  • இதுபோன்ற சில விஷயங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே உங்களது குழந்தைகளை சமூகத்தில் பாதுகாப்புடன் வளர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP