Mothers Day Gift Ideas: அன்னையர் தினத்தில் அம்மாக்களுக்கு மறக்க முடியாத கிப்ட் கொடுக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க!

அம்மாக்களுக்கு உதவிகள் செய்வதோடு, அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

 

 

the best gift for mothers day

வாழ்க்கையில் எத்தனைக் கஷ்டங்கள், துயரங்கள் வந்தாலும் அத்தனையும் சமாளித்துக் குடும்பத்தில் உள்ள அனைவரையும் மகிழ்வுடன் பார்த்துக் கொள்ளக்கூடிய முக்கியமான பொறுப்பில் உள்ளார் அம்மா. ஒவ்வொரு வீட்டிலும் அப்பாக்கள் மட்டுமல்ல, அம்மாக்களும் ஆணி வேர் தான். பிடித்த விஷயங்களை எதையும் தமக்காக செய்ய மாட்டார்கள். மற்றவர்களுக்காக வாழும் அற்புதமான தாயை பெருமைப்படுத்தவே ஒவ்வொரு அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மே 12 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், உங்களுடைய அம்மாக்களை மகிழ்விக்க நீங்கள் என்ன பரிசுகள்? கொடுக்கப் போகிறீர்கள்? அதற்காக திட்டம் எதுவும் உங்களிடம் உள்ளதா? இல்லையென்றால் இதோ இந்த கட்டுரையை சிறிது நேரம் வாசித்துவிட்டு உங்களின் அம்மாக்களை இந்த நாளில் மகிழ்வுடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

mothers day  gift ideas

அன்னையர் தினத்திற்கான தனித்துவமானப் பரிசுகள்:

அம்மாக்களை மகிழ்விக்க நீங்கள் எத்தனை பரிசுகள் கொடுத்தாலும் அவர்களுக்கு ஈடாக நிச்சயம் இருக்காது. ஆனாலும் நமக்கான திருப்தியையும், அம்மாவிற்கும் மகிழ்ச்சிக்குக்கொடுக்க வேண்டும் என்றால் கட்டாயம் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வெண்டும்.

விடுமுறை கொடுக்கவும்:

நாள் முழுவதும் ஓடி உழைக்கும் உங்களது அம்மாக்களை மனமுருக மகிழ்விக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஒரு நாள் வேலையிலிருந்து விடுமுறை கொடுக்கவும். சமையல், வீட்டை சுத்தம் செய்தல் போன்றவற்றிலிருந்து அவர்களை விடுவித்து ஓய்வெடுக்க செய்ய முயற்சி செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவுகளை நீங்கள் செய்யுங்கள் அல்லது கடைகளில் ஆர்டர் செய்துக் கொடுங்கள். நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்.

அம்மாக்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்:

குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் அயராது ஒடி உழைக்கின்றோம். உட்கார்ந்து பேசுவதற்குக் கூட யாருக்கும் நேரம் கிடைக்கவில்லை. எனவே உங்களது அம்மாக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். உட்கார்ந்து பேசுங்கள், ஷாப்பிங் செய்யுங்கள், சிறு வயதில் விளையாடுவது போன்று அனைவரும் சேர்ந்து விளையாடுங்கள்.

புகைப்படங்களைப் பரிசளித்தல்:

அம்மாக்களிடம் உங்களது உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தாவிட்டாலும், புகைப்படத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சிக்கவும். தாயுடன் உள்ள புகைப்படங்கள் மற்றும் அவர்களது சிறு வயதில் அவர்களது அம்மாக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையெல்லாம் போட்டோ ஃபேரம் செய்து கொடுக்கவும்.

நகைகளைப் பரிசளித்தல்:

அம்மாக்களுக்கு தங்க நகைகள் அல்லது மாடர்ன் நகைகள் பிடிக்கும் என்றால் அவற்றை வாங்கி பரிசளிக்கவும். இதோடு அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு நல்ல நகை பெட்டியையும் சேர்த்து வாங்கிக்கொடுக்கவும்.

குறுகிய பயணம்:

அம்மாக்களுக்கு வெளியில் செல்ல வேண்டும் என்ற நினைப்பு இருந்தாலும் வீட்டில் உள்ள வேலைப்பளு அவர்களை எங்கேயும் செல்வதற்கு அனுமதிக்காது. எனவே அவர்களை மகிழ்விக்க சிறு சுற்றுலா திட்டத்தை உருவாக்குங்கள்.

மேலும் படிக்க:கோடை சுற்றுலாவை மிகவும் சந்தோஷமானதாக மாற்ற வேண்டுமா? அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க!

கையால் எழுதப்பட்ட கடிதம்:

உங்களது அன்பை வாட்ஸ் அப், முகநூல் போன்றவற்றில் ஸ்டேட்டஸாக வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். நிச்சயம் வீட்டில் உள்ள அம்மாக்கள் ஒருபோதும் பார்க்க விரும்புவதில்லை. எனவே மனதில் உள்ள விஷயங்களை உங்களது கையால் எழுதப்பட்ட கடிதத்தை உங்களது அம்மாவிடம் கொடுக்கவும். இந்த பரிசு நீங்கள் எந்தளவிற்கு அக்கறையுடன் உள்ளீர்கள்? என்பதை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.

mothers day special

அன்னையர் தினம் என்பது நம்முடைய வாழ்க்கையை வடிவமைத்த பெண்களைக் கொண்டாடும் ஒரு சிறப்பான நிகழ்வு என்பதை மனதில் வைத்து அவர்களுக்காக இந்த விஷயங்களைச் செய்து விட மறந்துவிடாதீர்கள்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP