குழந்தைகளிடம் நேர்மை, நேரம் தவறாமல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் முதல் கடமை. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை நேர்மையாக இருக்க கட்டாயப்படுத்துவது குற்றம் ஆகும். இது போன்ற நல்ல பழக்கங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க சரியான முறையில் உதாரணமாக இருப்பது தான் பெற்றோர்களின் வேலை ஆகும். அந்த வரிசையில் உங்கள் குழந்தைகளை நேர்மையாக வளர்க்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உதாரணமாக இருங்கள்:
குழந்தைகளை நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்வதை தவிர்த்து பெற்றோர்கள் நேர்மையாக உதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் நேர்மை தவறாமல் இருந்தால் மட்டுமே குழந்தைகள் உங்களை உதாரணமாக பார்த்து நேர்மையாக வளர முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
திறந்த உரையாடல்:
உங்கள் வீட்டில் இருக்கும் வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை ஓப்பனாக வெளிப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். குழந்தைகளின் எந்தவித உணர்வுகளையும் நேர்மையாக நிலைப்படுத்தும் சூழல் வீட்டில் உருவாகும் போது அவர்கள் நேர்மையாக இருக்க உதவும். இது அவர்களின் உறவுகளில் நேர்மையை கற்றுக் கொடுக்கும்.
அனுதாபம் காட்ட சொல்லிக் கொடுங்கள்:
வளரும் குழந்தைகளுக்கு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்க சொல்லிக் கொடுப்பது அவசியம். இது மற்றவர்களிடம் நேர்மையாக அவர்கள் உரையாடவும் அவர்களின் கருத்துக்களை மதித்து நடக்கவும் பெரிதும் உதவுகிறது.
தெளிவான எதிர்பார்ப்பு:
உங்கள் வீட்டில் இருக்கும் வளரும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்கள் கற்க வேண்டிய மதிப்புகள் குறித்து உங்கள் தெளிவான எதிர்பார்ப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். நேர்மை மற்றும் உண்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நீங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துவது மிகவும் அவசியம்.
நேர்மை பாராட்ட வேண்டும்:
உங்கள் குழந்தை ஏதேனும் ஒரு விஷயத்தில் நேர்மையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் போது அவர்களை மனம் திறந்து பாராட்டுவது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும். வளரும் குழந்தைகளிடம் பாராட்டுகளை தெரிவிக்கும் போது இது அவர்களுக்கு நேர்மையான எண்ணங்களை கொடுக்கும். மேலும் குழந்தைகள் நேர்மையாக நடந்து கொள்ள இது பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க: குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டிய பாதுகாப்பு டிப்ஸ் இதோ!
நல்ல குணங்களை வளர்த்திடுங்கள்:
வளரும் குழந்தைகளின் செயல்களில் அவர்களின் நல்ல குணங்கள் பிரதிபலிக்க வேண்டும். இது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கு சுய விழிப்புணர்வு பொறுப்பு மற்றும் நேர்மை ஆகிய குணங்களை கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பு ஆகும். அஅதே போல உங்கள் குழந்தை தவறு செய்யும் போது அவர்களுக்கு அது தவறு என்று எடுத்துக் கூறி வழிகாட்டுதல் அவசியம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation