செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில், இன்னொரு திரைக்கலைஞரால் இட்டு நிரப்ப முடியாதபடிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றவர் சில்க் ஸ்மிதா.
இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்றும் புகழப்பட்ட அவர், மர்லின் மண்ட்ரோ போலவே மர்மமான முறையில் இறந்தும் போனார்.
பின் நாட்களில் அவரது மரணம் தற்கொலை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அவரது ரசிகர்கள் இது கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகங்களை எழுப்பினர். காரணம், அவர் இறந்த இடத்திலிருந்து காவல்துறை கண்டெடுத்த ஒரு கடிதம்.
ஆனால், அந்தக் கடிதத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கான பின்னணிக் காரணங்கள் குறித்து ஏராளமான கோணங்கள் வெளிவந்தனவே ஒழிய, இன்னதென்று குறிப்பிட்டு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை.
தன் இறப்புக்கு முன்னதாக சில்ஸ் ஸ்மிதாவே கைப்பட எழுதியதாக சமூக வலைதளங்களில் உலவும் அந்தக் கடிதத்தில் என்னதான் இருந்தது?
கடிதத்தில் இருந்தது தான் என்ன?
“ஒரு நடிகையாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. பாபு (டாக்டர் ராதாகிருஷ்ணன்) மட்டுமே சிறிது அன்புடன் நடந்து கொண்டார். அனைவரும் என் உழைப்பை சுரண்டினார்கள். என் வாழ்க்கையில் பல ஆசைகள் இருக்கிறது.
அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை. எல்லோருடைய செயல்களும் என்னை தொந்தரவு செய்தன. அதனால் ஒருவேளை மரணம் என்னைக் கவர்ந்திருக்கலாம்.
எல்லோருக்கும் நல்லது செய்திருக்கிறேன். இன்னும் என் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? கடவுளே இது என்ன நியாயம்? நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபுவுக்கு கொடுக்க வேண்டும். நான் அவரை மிகவும் நேசித்தேன், நேசித்தேன், உண்மையாக நேசித்தேன். அவர் என்னை ஏமாற்ற மாட்டார் என்று தான் நம்பினேன். ஆனால் அவரும் என்னை ஏமாற்றிவிட்டார்.
கடவுள் இருந்தால் கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார். அவர் எனக்கு செய்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு வலித்தது. நாங்கள் செய்வது தான் நியாயம் என்று நினைக்கும் அந்த குழுவில் பாபுவும் உள்ளார். என்னிடம் வாங்கிய நகைகளை திருப்பி தரவில்லை. இனியும் நான் வாழ விரும்பவில்லை. கடவுள் என்னை ஏன் படைத்தார்? ராமுவும் ராதாகிருஷ்ணனும் என்னை மிகவும் தூண்டினார்கள். அவர்களுக்காக நான் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை மரணத்திற்கு தள்ளி விட்டார்கள்.
பலர் என் உடலை மட்டும் கண்டார்கள். பலர் எனது திறமையை கண்டார்கள். பாபுவைத் தவிர யாருக்கும் நான் நன்றி சொல்லவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாக கூறி வருகிறார்.
அந்த வாழ்க்கைக்காக நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா? ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் என்று தெரிந்ததும் உடைந்துப் போனேன். என்னால் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. இந்தக் கடிதத்தை எழுத மிகவும் சிரமப்பட்டேன். எனக்குப் பிடித்த நகைகளைக் கூட நான் வாங்கவில்லை. இனி யாரிடம் போகும்? எனக்கு தெரியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு
கவர்ச்சி நடிகையாக அதிகம் அறியப்பட்ட சில்க் ஸ்மிதா என்னும் சிறந்த நடிகையின் ஆற்றலும் பெருந்தன்மையும் குறித்து ஏராளமான திரைக்கலைஞர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர்.
1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிறந்த விஜயலட்சுமி (சில்க் ஸ்மிதா) 1999 ஆம் ஆண்டு சென்னையில் இருந்த தனது குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 80களில் ரஜினி, கமல் என நாயகர்கள் கோலோச்சிய காலத்தில், ஒரு நடிகைக்காக தென்னிந்திய திரையுலகம் காத்துக்கிடந்ததென்றால் அது விஜயலட்சுமிக்காகத்தான்.
இந்த நிலையில், செல்வாக்கு, செல்வம், நன்மதிப்பு என எல்லாம் பெற்றதாக வெளியுலகம் எண்ணிக்கொண்டிருந்த போதும் வெறுமைதான் தன்னைச் சூழ்ந்திருந்தது என்று அவர் விளக்குவதாகவே இந்தக் கடிதம் உணர்த்துகிறது.
புதிருக்கும் புனிதத்துக்கும் இடைப்பட்ட கவர்ச்சிக் கன்னியாக மட்டுமே பெரிதும் அறியப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் போலவே அவரது மரணமும் ஒரு புதிராகவே ரசிகர்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation