How Can I Celebrate Republic Day With My Kid in Tamil: குடியரசு தினத்தை குழந்தைகளுடன் கொண்டாட சூப்பர் டிப்ஸ்

உங்கள் குழந்தையுடன் சேர்ந்து இந்த குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கான சில வழிகளை இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

girl with flag republic
girl with flag republic

குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் குழந்தைகள் தேச பற்றுடன் வளர்வதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். குடியரசு தினத்தை ஒரு தேசிய விடுமுறையாக பார்க்காமல், குழந்தைகளிடம் தேசப்பற்றை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். நம் தேசத்தின் மகத்தான பெருமைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இந்தக் குடியரசு விடுமுறையை சிறப்பாக கொண்டாடுவதோடு, அதிலிருந்து பயனடைவதற்கான சில வழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.

குழந்தையுடன் சேர்ந்து அணிவகுப்பை பார்க்கலாம்

ஒரு சில தொலைக்காட்சி சேனலில் அணிவகுப்பின் நேரலையை ஒளிபரப்புவார்கள். குடும்பமாக அமர்ந்து உங்கள் குழந்தையுடன் சேர்ந்து இந்த அணிவகுப்பை ரசிக்கலாம். நமது தேசத்தின் பன்முகப் பண்பாட்டைப் பற்றி விவரிக்கலாம். மேலும் பிறருடைய கலாச்சாரத்தை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இதனுடன் குழந்தைகளுக்காக வழங்கப்படும் வீரத்திற்கான விருதுகளையும் பார்க்கலாம்.

republic day

கதை சொல்லலாம்

நம் தேசத்தின் மாவீரர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றிய கதைகளை குழந்தைக்கு சொல்லலாம். இதன் மூலம் தேசத்தின் பெருமையை அறிவதோடு ஒரு சில நல்ல குணாதிசயங்களையும் கதையின் வாயிலாக அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

நாடகம் நடத்தலாம்

நமது தேச தலைவர்கள் அல்லது மாவீரர்களை பற்றிய கதைகளை குழந்தைகளுக்கு சொல்லி அவர்களை அதில் நடிக்கவும் வைக்கலாம். குழந்தைகளுக்கான வசனங்களை சொல்லிக் கொடுத்து ஒரு கலை நிகழ்ச்சி போல நடத்தலாம். குழந்தைகள் இப்படி நடித்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பொழுது அவர்களின் தன்னம்பிக்கையும் வளரும். மேலும் அவர்களின் கூச்ச சுபாவமும் காணாமல் போய்விடும்.

ஃபேன்ஸி டிரஸ் போட்டி ஏற்பாடு செய்யலாம்

republic day

உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள குடும்பங்களுடன் இணைத்து, குழந்தைகளுக்கான ஃபேன்சி டிரஸ் போட்டியை ஏற்பாடு செய்யலாம். இந்த போட்டியில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரர்களை போல உடை அணிந்து வந்து அவர்களை போலவே நடிப்பது, வசனம் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் பல்வேறு முக்கிய வீரர்கள் பற்றிய தகவல்களை அவர்களால் கற்றுக் கொள்ள முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: மனம் விட்டு பேசலாம் - டீன் ஏஜ் காதலை கையாள்வது எப்படி?

தேசியக்கொடி ஏற்றலாம்

republic day

உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து, நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தேசிய கொடியை ஏற்றலாம். தேசிய கீதத்தை பாடி அதன் பெருமையையும் சொல்லி கொடுங்கள். தெரியாத குழந்தைகளுக்கு தேசிய கீதத்தை பாடவும் கற்றுக்கொடுங்கள்.

நம் தேசத்தை பற்றி உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய சரியான நேரம் இது. இந்த குடியரசு தினத்தை ஒரு பயனுள்ள குடும்ப நாளாக மாற்றுங்கள். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் !!

இந்த பதிவும் உதவலாம்: குழந்தையை அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP