இந்த தீபாவளி திருநாளில் நம் பாரம்பரியத்துடன் செல்வ வளம் மற்றும் மகிழ்ச்சி பெருக செய்ய சில வாஸ்து சாஸ்திர குறிப்புகளை பின்பற்றினால் போதும் என்று ஜோதிடம் கூறுகிறது. இருளை நீக்கி உங்கள் வீட்டிலும் சரி வாழ்விலும் சரி ஒளியை ஏற்படுத்தும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகையில் நம் வீடுகள் முழுவதும் தீபம் ஏற்றி ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும் நாளாக கருதப்படுகிறது. இந்த விசேஷ நாளில் சில குறிப்பிட்ட வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் நம் வீட்டில் உள்ள தீய சக்திகள் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் விரட்டி வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க மகிழ்ச்சி அதிகரிக்க செய்ய முடியும். தீபாவளி தினத்தில் மகாலட்சுமியை வீட்டில் வரவேற்க தயாராகும் போது இந்த வாஸ்து குறிப்புகளை நீங்கள் கவனத்தில் கொள்வது அவசியம். அதேபோல நம் வீடுகளில் எந்த திசையில் எந்த மாதிரி விளக்கை ஏற்ற வேண்டும் மற்றும் எந்த நிறங்களில் ரங்கோலி கோலம் அமைக்க வேண்டும் என்று சில வாஸ்து குறிப்புகள் கூறுகிறது. அந்த வரிசையில் தீபாவளி அன்று நம் வீட்டில் செல்வம் பெருகிட எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை என்று கூறினாலே வீடு முழுவதும் தீபங்களால் அலங்கரிப்பது தான் நம் தமிழர் கலாச்சாரம். ஆனால் குறிப்பிட்ட திசையில் நெய்விளக்கு ஏற்றி வைத்தால் அது உங்கள் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜிகளை நிறைய செய்யும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வரிசையில் உங்கள் வீட்டின் வடகிழக்கு தென்கிழக்கு வடமேற்கு தென்மேற்கு திசைகளில் விளக்கு ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் நல்ல பாசிட்டிவ் அதிர்வலைகள் பரவும் என்று கூறப்படுகிறது. அதே போல பாரம்பரிய முறையில் விளக்கு ஏற்றும் போது அந்த விளக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அணையாமல் எறிய வேண்டும். குறிப்பாக தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்து தினமும் மாலை ஒரு மணி நேரம் வீட்டில் இந்த திசைகளில் விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதேபோல விளக்கு ஏற்றி வைப்பதால் உங்கள் வீட்டில் பண்டிகை கால மகிழ்ச்சி மட்டும் இல்லாமல் ஒரு தெய்வீக ஆற்றலும் நேர்மறை எண்ணங்களும் அதிகமாக பரவும். மேலும் குறைந்த நேரம் மட்டுமே எரியும் மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை உங்கள் வீட்டின் வடக்கு திசையில் ஏற்றி வையுங்கள். அதுவே அதிக நேரம் எரியக்கூடிய தீபங்களை உங்கள் வீட்டின் தெற்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். இதுபோல செய்தால் உங்கள் வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல்கள் சம நிலையில் பரவி இருக்க வாய்ப்புகள் அதிகம்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு வீட்டு வாசலை அலங்கரிக்கும் பிரமாண்ட ரங்கோலிகள்
இந்த தீபாவளி பண்டிகை நாளில் நேர்மறை ஆற்றல்கள் பரவி இருக்க மற்றும் வீட்டில் சந்தோஷங்கள் நிறைந்து இருக்க ரங்கோலி கோலம் இடுவது அவசியம். உங்கள் வீடுகளில் வடக்குப் பார்த்து வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு திசையில் ரங்கோலி கோலம் இடுவது நல்லது. மேலும் இந்த ரங்கோலி கோலங்கள் பச்சை நிறம் ஊதா நிறம் வெள்ளை நிறத்தில் கோல மாவுகளை பயன்படுத்தலாம். குறிப்பாக பச்சை ஊதா போன்ற நிறத்தில் விளக்குகளை ஏற்றி வைப்பது உங்கள் வீட்டில் நன்மைகளை பெருக செய்யும். அதே சமயம் விளக்கு வாங்கும் போது சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பு நிறங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இதுவே தெற்கு பார்த்த வாசலை கொண்ட வீடுகளில் வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு திசையில் பல வண்ணங்கள் நிறைந்த ரங்கோலி கோலம் இடுவது சிறப்பு வாய்ந்தது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வ வளமும் நிறைந்திருக்கும். குறிப்பாக இந்த ரங்கோலி கோலங்களில் ஊதா மற்றும் பச்சை நிறங்களை குறைவாக பயன்படுத்த வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com