Onam Festival 2024: பூக்கோலம் முதல் சத்யா விருந்து சுவை வரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஓணம் பண்டிகை வரலாறு

கேரளாவின் அறுவடை திருநாளாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டம் பற்றி தெரிந்துகொள்வோம். இது மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகையாகும்

hy is Onam celebrated

தென்னிந்தியா கேரளா பகுதியில் கொண்டாடப்படும் ஓணம் ஒரு மாபெரும் பண்டிகையாக இருக்கிறது. கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழர்களும் ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த பண்டிகை கலைக்கட்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா மலையாளத்தில் திருவோணம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையைக் கேரளாவில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஓணம் விழாவில் மக்கள் தங்கள் வீட்டைப் பூக்களால் அலங்கரித்து, பத்து நாட்களுக்கு சத்யா (விருந்து) உண்டு, இதில் 24-28 வகையான சைவ உணவுகள் சமைத்து உண்டு மகிழ்வார்கள். இந்த வருடம் ஓணம் பண்டிகை செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15, 2024 வரை கொண்டாடப்படும். ஓணம் வழிபடும் முறை மற்றும் அதன் பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

onam inside

நல்லாட்சிக்குப் பெயர் பெற்ற மன்னர் மகாபலியை சோதிக்கும் விதமாக , விஷ்ணு மகாபலி கண்முன் தோன்று மூன்றடிகளால் மூடக்கூடிய நிலத்தை கேட்டார். கேட்பதை கொடுக்கும் பெருந்தன்மைக்கு பெயர் பெற்ற மகாபலி மன்னர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் மூவுலகையும் வாமனன் அவதாரம் எடுத்து கால்களால் உலகையே மூன்று அடிகளில் முடினார். முதல் அடி பூமியையும், இரண்டாவது வானத்தையும், மூன்றாவது அடி மகாபலியின் தலையில் வைத்து முடினார் நடந்தது. இதன் விளைவாக, மகாபலி பாதாள உலகத்திற்குத் தள்ளப்பட்டார். கேட்டதை கொடுத்த மன்னர் நல்லொழுக்கத்தைக் கண்ட விஷ்ணு பகவான் வருடத்திற்கு ஒரு முறை மகாபலி மன்னர் ஆட்சி செய்த ராஜ்ஜியமான கேரளாவிற்கு வருடத்திற்கு ஒரு முறை தனது மக்களை பார்க்க வரும் ஆசியை வழங்கினார். கேட்டதை கொடுத்த மகாபலி மன்னர் வருலை நாளை ஓணம் பண்டிகையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்குப் பிடித்த பூக்கோலம் இட்டு, மன்னருக்கு பிடித்த உணவுகளை சமைத்து. மகாபலி மன்னரின் வருகை எதிர்நோக்கிக் காத்திருக்கும் திருநாளாகும்.

பூக்கோலம்

ஓணத்திற்காகப் போடப்படும் கோலம் அதப்பூக்களம் அல்லது ஓணப்பூக்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அதைப்பூக்கோலத்தைச் சிறிதாகத் தொடங்கி ஓணம் பண்டிகை அன்று ஒரு பெரிய கோலமாக போடப்படும். சிறிய மலர் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் ரங்கோலி முழு வடிவங்களை அமைக்கப்பட்டன. ஓணத்தின் முதல் நாள் அத்தாப்பூ மலர் ரங்கோலி கோலம் இட்டு தொடங்குகிறது.

ஓணம் சத்யா விருந்து

onam foods inside

ஓணம் சத்யா என்பது வாழை இலையில் பரிமாறப்படும் ஒரு பிரமாண்டமான விருந்தாகும், இதில் முழுவதும் மகாபலி மன்னருக்கு பிடித்த உனவுகள் அனைத்தும் இருக்கும். இதில் சாதம், பருப்பு, காய்கறிகள், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகளிலிருந்து பொதுவாக சுமார் 20 முதல் 30 வெவ்வேறு வகையான உணவுகள் இதில் அடங்கும். அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றுகூடி விருந்தை உண்டு மகிழ்வார்கள்.

ஓணம் புது ஆடைகள்

மேலும் படிங்க: மகாபலி மன்னரை வண்ணமயமான இந்த ரங்கோலி பூக்கோலங்களை வாசலில் இட்டு வரவேற்கவும்

ஓணம் பண்டிகையின் போது மக்கள் பெரும்பாலும் புதிய ஆடைகளை அணிவார்கள். குறிப்பாக பெண்களுக்கு வெள்ளை மற்றும் தங்க-பார்டர் புடவை மற்றும் ஆண்களுக்கு தங்க பார்டர்கள் கொண்ட வெள்ளை வேட்டி அணிவார்கள்

ஓணம் பாடல்கள்

onam dance inside

மன்னன் மகாபலியின் கதையை பாடி, கேரளாவின் வளமானத்தையும், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை செய்து ஓணத்தை சிறப்பிப்பார்கள்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP