இந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் 10 நாள் ஓணம் பண்டிகை, சிறப்பு மலர் அலங்கார ரங்கோலி கோலங்களுடன் துடங்குகிறது. ஓணம் அதிக அளவில் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. இது மலையாள மொழியில் திருவோணம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மாதங்களில் வருகிறது. இந்த முறை ஓணம் பண்டிகை செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 17 வரை கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் பூக்களால் ரங்கோலி செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வீட்டின் பிரதான கதவு முதல் முற்றம் வரை இந்த ரங்கோலி கோலங்களைப் போடலாம். ஓணம் பண்டிகையன்று மகாபலி மன்னரை மகிழ்விக்க இந்த மலர்களால் அலங்காரிக்கப்பட்ட ரங்கோலியைப் போடலாம். இந்த ஆண்டு ரங்கோலி கோல வகைகளைப் பார்க்கலாம்.
மேலும் படிங்க: ஓணம் சத்யா விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகள்
வட்ட வடிவிலான ரங்கோலி பூக்கோலம்
- ஓணம் திருநாளில் வீட்டு முற்றத்தை அழகாக்க விரும்பினால் எளிதான வட்ட வடிவ ரங்கோலி பூக்கோலத்தைப் போட்டு மகாபலி மன்னரை வரவேற்கலாம். உங்கள் முற்றத்தின் அளவை வைத்து சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ அழகான கோலங்களைப் போடலாம்.
- இதற்கு முதலில் சுண்ணாம்பு சாக்பீஸ் கொண்டு பூ மற்றும் இதழ்களின் நடுவில் ஒரு வட்டத்தை உருவாக்கவும். ரங்கோலியை நன்றாக இருக்க பூவின் வடிவத்தை வட்ட வடிவில் அழகாக இருக்க வேண்டும்
- இப்போது வெவ்வேறு வண்ணங்களின் கொண்ட பூக்கள் இதழ்களை எடுத்து வரைந்த ரங்கோலி கோலத்தில் அழகாக வடிவமைக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு பெட்டியை உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் பூக்களால் நிரப்பவும்.
- ரங்கோலிக்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்க, மாம்பழம், துளசி மற்றும் வெற்றிலை இலைகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி காளியான பகுதியை நிரப்பி முடிக்கலாம்.
- உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள ரங்கோலி வடிவமைப்பை நீங்கள் எடுத்துக்கொள்ளவும்.
படகு போட்டி வடிவில் ரங்கோலி கோலம் வடிவமைப்பு
- ஓணம் பண்டிகையின் போது படகுகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஓணம் அன்று நடக்கும் படகுப் போட்டியின் அழகிய காட்சியைக் காண மக்கள் செல்வர்கள். இது ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஓணம் பண்டிகையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் முற்றத்தின் நடுவில் அல்லது பிரதான நுழைவாயிலில் ஒரு படகின் அழகிய ரங்கோலி வடிவமைப்பைச் செய்யலாம்.
- படகு ரங்கோலி வடிவமைக்க முதலில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருக்கும் படகு மற்றும் ஒரு தென்னை மரத்தைச் சுண்ணாம்பு சாக்பீஸ் உதவியுடன் வரைந்துகொள்ளவும்.
- இதற்குப் பிறகு விளிம்பில் ஒரு வட்டத்தை உருவாக்கி படகைத் தவிர மற்ற இடங்களில் அழகிய கோல வடிவுகளை உருவாக்கவும். உங்கள் தேவைக்கேற்ப பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ செய்யலாம்.
- இப்போது அதில் வெவ்வேறு பூக்களின் இதழ்களை நிரப்பி முடிக்கவும். பழுப்பு அல்லது கவி நிற மலர்களைக் கொண்டு படகை நிரப்பவும்.
பூக்களைக் கொண்டு ரங்கோலி வடிவமைப்பு
- ஓணம் பண்டிகையையொட்டி, உங்கள் வீட்டு முற்றத்தில் சதுர பெட்டி ரங்கோலியை நீங்கள் செய்யலாம். இதைச் செய்ய உங்களுக்கு ஐந்து வண்ண பூக்கள் மற்றும் மா அல்லது அசோக இலைகள் தேவைப்படும்.
- ரங்கோலி செய்ய முதலில் தரையை சுத்தம் செய்யுங்கள். இதற்குப் பிறகு சுண்ணாம்பு சாக்பீஸ் உதவியுடன் ஒரு சிறிய முக்கோணத்தை உருவாக்கவும். இதற்குப் பிறகு ஒரு பெரிய செவ்வகப் பெட்டியை உருவாக்கி, வெளியே ஒரு வட்டத்தை உருவாக்கவும்.
- அதைச் செய்த பிறகு அதை வெவ்வேறு பூக்களால் நிரப்பி முடிக்கவும். நீங்கள் இப்போது செவ்வக பெட்டியின் வெளிப்புற எல்லையை இலைகளை கொண்டு நிரப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நட்சத்திர ரங்கோலி பூக்கோலம்
- ஓணம் பண்டிகையன்று உங்கள் முற்றத்தை அலங்கரிக்கப் பெரிய ரங்கோலி வடிவமைப்பை நீங்கள் தேடுகிறார்களானால், இந்த நட்சத்திர ரங்கோலி வடிவமைப்பு சிறப்பான தேர்வாக இருக்கும்.
- இதைச் செய்ய, முதலில் சுண்ணாம்பு வட்ட வடிவை உருவாக்கி அதன் மேல் நட்சத்திர வடிவை கொடுக்க வேண்டும். பின்பு இரண்டு நட்சத்திர நடுவில் புதிய நட்சத்திர அடுக்குகளை உருவாக்கலாம்.
- இப்போது அதன் வெளிப்புறத்தை நீட்டிக்க ஒரு வட்டத்தை வரைந்து அதை நட்சத்திர விளிம்பில் இணைத்து முக்கோண வடிவிலான மலர் இதழை உருவாக்கவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் விருப்பப்படி வெவ்வேறு வண்ண மலர்களின் இதழ்களை நிரப்புவதன் மூலம் அதை முடிக்கவும்.
- ரங்கோலியை இன்னும் அழகாக்க, ஊதா, வெள்ளை மற்றும் பச்சை இலைகளால் விளிம்புகளை நிரப்பவும்.
பெண் நடனம் ஆடும் ரங்கோலி பூக்கோலம்
- உங்கள் முற்றத்தை அழகை கூட்டும் வகையில் பெண் நடனம் ஆடும் பூக்கோலத்தைப் போட்டும் அலங்கரிக்கலாம். உங்கள் முற்றம் அளவிக்கு ஏற்ப வடிவத்தை உருவாக்கவும்
- இந்த பூக்கோலத்தை உருவாக்க முதலில் சுண்ணாம்பு கொண்டு திருவாதிரை , கும்மட்டிகளி , புலிக்கலி , தும்பி துள்ளல் , ஓணம் காளி உள்ளிட்ட பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றை எடுத்து வரைய தொடங்கவும்.
- நடன வடிவில் மேல் சுற்றி வட்ட வடிவை கொடுக்க வேண்டும். இந்த வட்ட வடிவை மேலும் அழகு கூச்ச இலை வடிவம் அல்லது வட்டத்துக்குள் சிறிய வட்ட வடிவம் போன்று முழுமை படுத்திக்கொள்ளலாம்.
மயில் பூக்கோலம்
- மயில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும், அதேபோல் அதன் வடிவில் கோலம் இடுவது இன்னும் வீட்டு முற்றத்தை அழகு சேர்க்கும்.
- முதலில் மயில் முக மற்றும் கழுத்து வடிவத்தை உருவாக்கிக் கொள்ளவும்.
- அதன்பிறகு மயிலின் இறகை வட்ட வடிவில் உருவாக்கவும்.
- இந்த மயில் கோலத்தை அழகிய பூக்களைக் கொண்டும் மேலும் அலங்கரிக்கவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik & Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation