அன்னையர் தினம் : அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே... வணங்காது உயர்வில்லையே

மே 11 ஆம் தேதி கொண்டாடப்படும் அன்னை தினத்தின் வரலாறு, அன்னையர் தினம் தோன்றிய வரலாறு, அன்னை தினம் கொண்டாட்டம் எங்கிருந்து தொடங்கியது உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம். பெற்றெடுத்தால் தான் தாய் என்று பொருளல்ல. தாய் உள்ளம் கொண்ட பெண்கள் அனைவருமே தாய் என கருதுங்கள்.
image

ஒவ்வொரு ஆண்டும் மே 11ஆம் தேதி உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மனித வாழ்வியலில் தாய் என்ற அன்பு உள்ளத்தை ஒரு போதும் நாம் தவிர்க்க இயலாது. அன்னையர் தினம் தாய்மார்களை கொண்டாடும் நாளாக நினைக்க கூடாது. நம் வாழ்கையையும் தலைமுறைகளை கடந்து பாரமரியத்தை கொண்டு செல்வதிலும் தாயிடம் பங்கு பெரிது என அன்னையர் தினம் நினைவூட்டுகிறது. குடும்பம் மற்றும் சமூகத்திற்கு தாய் காட்டும் அன்பு, செய்யும் தியாகங்கள் மற்றும் அளிக்கும் பங்களிப்பை கௌரவிக்கும் ஒரு சிறப்பு மிக்க சந்தர்ப்பமாக உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை மே 11, 2025 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

mothers day history significance

அன்னையர் தினம் 2025

அன்னையர் தினம் முக்கியத்துவம்

அன்னையர் தினத்தை பற்றி தெரிந்துகொள்ள 1908 ஆம் ஆண்டு கதைகளை புரட்ட வேண்டும். அமெரிக்க ஆர்வலர் அன்னா ஜார்விஸ் தனது தாயின் மனிதாபிமானப் பணிகளால் ஈர்க்கப்பட்டு முதல் முறையாக அன்னையர் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். 1914 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த நாள் முதல் அன்னையர் தின கொண்டாட்டம் உலக நாடுகளுக்கு பரவியது.

அன்னையர் தினம் வெறும் கொண்டாட்டமாக கருதக் கூடாது. இந்த நாள் நம் வாழ்க்கையை வடிவமைப்பதிலும் தலைமுறைகளை வளர்ப்பதிலும் தாய்மார்களின் வகிக்கும் முக்கிய பங்கை நினைவூட்டுகிறது. தாயின் தன்னலமற்ற அன்பு, வழிகாட்டுதல் மற்றும் தியாகங்கள் குடும்பங்கள் மற்றும் சமூக கட்டமைப்புக்கு அடித்தளத்தை உருவாக்குகின்றன.

பெற்றெடுத்த தாய்மார்களை மட்டுமல்ல பாட்டி, மாற்றாந்தாய், வளர்ப்பு தாய்மார்கள் மற்றும் பிறரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து தாய்வழி நபர்களையும் அங்கீகரிக்கும் ஒரு நாளாகும்.

அன்னையர் தினம் கொண்டாடுவது எப்படி?

பல ஆண்டுகளாக அன்னையர் தினத்தில் தாய்மார்களுக்கு பரிசு வழங்குவது, பூக்கள் கொடுப்பது மற்றும் பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அமைந்திருக்கிறது. வணிக நோக்கத்தை தாண்டி மனதளவில் ஒவ்வொரு பிள்ளையும் தனது தாயின் அன்பை உணர்ந்து இந்த நாளில் அவர்களை குழந்தை போல் பாவித்து அக்கறை காட்ட வேண்டும். அன்னையர் தினத்தில் உங்கள் தாய்க்கு பிடித்தமான விஷயங்களை செய்து இந்த நாளை அவர்களுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிடவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP