Child Growth : குழந்தையின் வளர்ச்சியை கணக்கிடுவதற்கான வழிகள்!

வயதிற்கு ஏற்ப ஒரு குழந்தையின் எடை, உயரத்தை கொண்டு அதன் வளர்ச்சியை பெற்றோர் கண்காணிப்பது அவசியம். அதற்கான வழிகள் இங்கே…

development in a child
development in a child

அதீத அக்கறை கொண்ட பெற்றோர் தங்களது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதெல்லாம் மருத்துவரை பரிசோதிக்க விடாமல் அவரிடம் குழந்தையின் எடை சரியாக உள்ளதா ? வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இருக்கிறதா ? போன்ற கேள்விகளை ஒவ்வொரு முறையும் கேட்பது உண்டு. அதிலும் சில பெற்றோர் மருத்துவரிடம் தனது மகன் கல்வி பயிலும் இடத்தில் பிற குழந்தைகளை விட மிகவும் குட்டியாக தெரிகிறான் என வருத்தப்படுவதை பார்க்க முடியும். ஒரு சிலர் அடுத்தக்கட்டத்திற்கு சென்று மருத்துவரை பரிசோதிக்க விடாமல் நேரடியாகவே குழந்தையின் வளர்ச்சிக்கு மருந்து இருந்தால் கொடுங்கள் என் கேட்பதை பார்த்திருப்போம்.

குழந்தையை எந்த உடல்நல பிரச்சினைக்காக அழைத்து வந்தோம் என்பதை மறந்து குழந்தையின் உயரம், வளர்ச்சி தொடர்பான கேள்விகளையே அடுக்கி மருத்துவரையும் பெற்றோர் குழப்புகின்றனர். குழந்தையின் வளர்ச்சியை கணக்கிடுவதற்காகவே உலக சுகாதார நிறுவனம் பிரத்யேகமாக ஒரு செயலியை வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Growth chart என்ற செயலியை பெற்றோர் பதிவிறக்கம் செய்யலாம்.

monitoring child growth

ஊரில் இருந்து வரும் உறவினர் குழந்தையை பார்த்தவுடன் எடை குறைவாக இருப்பதாக கூறிவிட்டால் அதை நம்புவதை நிறுத்துங்கள். குழந்தையின் வயது, எடை, உயரத்தை வைத்தே வளர்ச்சியை கணக்கிட வேண்டும்.

மேலும் படிங்கஆறு மாத குழந்தைக்கு ஆரோக்கியமாக உணவு ஊட்டும் முறை

உதாரணமாக ஐந்து வயது குழந்தை 18 கிலோ எடையில் இருந்தால் அதே வயதில் 16 கிலோ எடையில் இருக்கும் குழந்தை எடை குறைவு என அர்த்தம் கிடையாது, 19 கிலோ எடையில் இருக்கும் குழந்தை எடை அதிகமும் கிடையாது. வயதிற்கு ஏற்ற உயரத்தில் குழந்தை சராசரியான எடையில் இருந்தால் போதுமானது. எடை அதிகமாக இருந்தால் அது அசாதாரணம். இதை வைத்தே குழந்தையின் வளர்ச்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் வயது அட்டவணை செயலியில் ஐந்து வயது குழந்தையின் தகவலை பதிவிடுங்கள். பிறந்த தேதி, தற்போதைய வயது, எடை, உயரம் ஆகியவை அதில் கேட்கப்பட்டு இருக்கும். விவரங்களை பதிவிட்ட பிறகு வயதிற்கு ஏற்ற உயரம், வயதிற்கு ஏற்ற எடை, உயரத்திற்கு ஏற்ற எடை மற்றும் BMI வரையறை என நான்கு விருப்பங்கள் இருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்யவும். இந்த வரைபடத்தின் குழந்தையின் வளர்ச்சி அளவுகள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

பச்சை கோடு சரியான அளவை குறிக்கிறது. மஞ்சள் கோடு அதிக அளவை குறிக்கிறது, சிவப்பு கோடு மிகக் குறைந்த அளவு என அர்த்தம். சிவப்பு கோட்டில் உங்களது குழந்தையின் வளர்ச்சி இருந்தால் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிங்கஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

அதே போல ஒவ்வொரு வருடத்திற்கும் இதை கணக்கிடுங்கள். சராசரியாக இருந்த வளர்ச்சி திடீரென குறைந்தால் அதுவும் கவனிக்க வேண்டிய விஷயம் தான். குழந்தையின் வளர்ச்சி சீராக இருந்த இல்லை என்பதை அறிந்த பிறகே மருத்துவரை அணுகி ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP