மருத்துவர்களின் அறிவுரைப்படியே குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கின்றனர். தாய்ப்பால் எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆறு மாதங்களுக்கு பிறகு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கிறோம் என்பதும் முக்கியம். ஆறு மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவுகள் கொடுப்பது அவசியம். ஏனெனில் ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் போதாது. அதேநேரம் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.
நான்கு மாதங்களுக்கு பிறகு குழந்தையின் தலை ஓரளவு ஆடாமல் நிற்கும். மெல்லும் பழக்கம் ஐந்தாவது மாதத்தில் வரும். ஆறு மாதங்களுக்கு முன்பாக குழந்தைக்கு சங்கு மூலம் வேறு உணவுகளை கொடுத்தால் துப்பி விடுவார்கள். ஆனால் அதன் பிறகு திட உணவுகளை விழுங்கும் தன்மை குழந்தைக்கு வந்துவிடும். ஏதாவது ஒரு பொருளை வாயில் வைக்க குழந்தையும் முயற்சிக்கும். எனவே இணை உணவு கொடுப்பதற்கு மிகச்சரியான தருணம் என்றால் அது ஆறாவது மாதம் தான்.
- ஆறாவது மாதத்தில் ராகி, அரிசி, பருப்பு போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்கலாம். அனைத்தையும் தனித்தனியாக அரிசி கஞ்சி, ராகி கூழ், பருப்பு கஞ்சி என மிக்ஸியில் அரைத்து கொடுக்கலாம்.
- ஆனால் நவதானியங்கள் அடங்கிய சத்து மாவை கொடுக்க கூடாது. குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் எந்த தானியத்தால் குழந்தை பாதிப்படைந்தது என்பதை கண்டறிய இயலாது.
மேலும் படிங்க ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
- மிகவும் தண்ணியாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியான பதத்தில் உணவுகளை அரைத்து கொடுக்கலாம்.
- ஆனால் ஏழு மாதங்களுக்கு பிறகு மிக்ஸியில் அரைத்து கொடுப்பதை தவிர்க்கவும். கேரட், உருளைக்கிழங்குகளை காய்கறிகளை நன்கு வேக வைத்து தொண்டையில் சிக்காதது போலவும், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை நன்கு மசித்தும் குழந்தையிடம் கொடுங்கள். ஊட்டுவதற்கு பதிலாக ஒரு சிறிய பாத்திரத்தில் உணவுகளை குழந்தையின் முன் வைக்கவும்.
- குழந்தைகளுக்கான பிரத்யேக இருக்கையில் அவர்களை அமர வைத்து உணவுகளை வைத்துவிட்டால் குழந்தைக்கு கட்டாயம் சாப்பிட தோன்றும். குழந்தை நன்றாக சாப்பிடுகிறது என்பதற்காக உணவுகளை திணிக்க கூடாது.
- மிதமான அளவு சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட உணவுகளை சுவைக்காக சேர்க்கலாம். தாய்ப்பால் குடிப்பது போக இரண்டு வேலைக்கு மட்டும் இணை உணவுகள் கொடுங்கள்.
- எட்டு மாதங்களில் சத்து மாவு கொடுங்கள். அதே போல ரசம் சாதம், பருப்பு சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றை மசித்து தரவும்.
- ஒரு வயது வரை குழந்தைக்கு இணை உணவில் பால் பொருட்கள் கொடுக்க வேண்டாம். எனினும் தயிர் சாதம் கொடுத்து பழக்குவதில் தவறில்லை.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation