
Hair care tips: முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். ஆனால், அதற்கு சரியான கவனிப்பும், பொறுமையும் அவசியம். உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு, நீங்கள் அன்றாடம் பின்பற்றக் கூடிய 8 எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: இளநரை பிரச்சனைக்கு ஈசி தீர்வு: வீட்டிலேயே இந்த எண்ணெய்யை தயாரிப்பது எப்படி?
கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை சத்துகளை உங்கள் உணவின் மூலம் பெறுவது மிக முக்கியம். பயோட்டின் (Biotin), சின்க் மற்றும் வைட்டமின் ஏ, சி, டி போன்ற சத்துகள் நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஊட்டச்சத்துகள் முடியின் வளர்ச்சியை தூண்டும்.
தொடர்ச்சியாக தலைக்கு புத்துணர்வூட்டும் மசாஜ் கொடுப்பது, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வேர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ரோஸ்மேரி போன்ற எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது கூடுதல் பலனை தரும்.

முடி பிளவுகளை (Split Ends) தவிர்ப்பது மிக முக்கியம். ஒவ்வொரு 6 முதல் 8 வாரங்களுக்கும் ஒருமுறை முடியின் முனைகளை வெட்டுவதன் மூலம் முடி பிளவடைவதை தடுக்கலாம். ஆரோக்கியமான முனைகள் ஒட்டுமொத்த முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் முடியை சேதப்படுத்தி, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். வெயிலில் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், தொப்பி அணிந்து செல்லலாம். இது நம் கூந்தலை பராமரிக்க உதவும்.
மேலும் படிக்க: மழைக்காலம் வந்தாச்சு... சருமம் பாதிப்படையாமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
முடி உள் இருந்தே நீரேற்றத்துடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். நீர்ச்சத்து முடியின் நெகிழ்வுத்தன்மையை (Elasticity) பராமரிக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது.

தூக்கம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதுடன், முடி வேர்க்கால்களின் வளர்ச்சி தன்மைக்கு உதவுகிறது. சிறந்த முடி வளர்ச்சியை பெற, தினமும் 7 முதல் 9 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.
இறுக்கமான போனிடெயில் (Ponytails) போடுவது கூந்தலின் வேர்களை இழுத்து, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். முடியின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்க, தளர்வான சிகை அலங்காரங்களை தேர்ந்தெடுங்கள்.
முடி வளர்ச்சி என்பது உடனடி விளைவுகளை அளிக்காத ஒரு செயல்முறை ஆகும். அதனால், பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். உங்கள் கூந்தல் பராமரிப்பு முறைகளில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும். சிறிது காலம் கழித்து முடி வளர்ச்சியில் உள்ள முன்னேற்றத்தை காண முடியும்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு சரியான உணவு, நல்ல தூக்கம், குறைவான மன அழுத்தம் மற்றும் நிலையான பராமரிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. இந்த எளிய குறிப்புகளை பின்பற்றி, நீங்களும் ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com