
ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு தான். இதில் புரதம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முடி, கெரட்டின் (Keratin) எனப்படும் ஒரு வகை புரதத்தால் ஆனது.
மேலும் படிக்க: பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்க
எனவே, உணவு மூலம் புரதத்தை எடுத்துக் கொள்வது முடியின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் இன்றியமையாதது. அந்த வகையில் புரதச்சத்து நிறைந்த ஐந்து வகையான உணவுகளை இந்தப் பதிவிப் பார்க்கலாம். இவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியாக இருக்கும்.
முட்டையில் உயர்தர புரதம் நிறைந்துள்ளது. இது முடியின் இழைக்கு முக்கியமான கெரட்டின் உற்பத்திக்கு அவசியம். கூடுதலாக, முட்டையில் பயோட்டின் (Biotin) உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, முடி உதிர்வதை தடுக்கும் ஒரு வைட்டமின் பி ஆகும். முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவை உள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரித்து, முடி வளர்ச்சிக்கான தகுந்த சூழலை உருவாக்குகிறது.

கோழி இறைச்சியில் அதிகப்படியான புரதம் காணப்படுகிறது. சுமார் 100 கிராம் கோழி இறைச்சியில் ஏறத்தாழ 31 கிராம் புரதம் உள்ளது என்று கூறப்படுகிறது. இது முடியின் வேர்க்கால்களில் உள்ள திசுக்களை சரி செய்ய உதவுகிறது. மேலும், கோழி இறைச்சியில் உள்ள அமினோ அமிலம், முடியின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான இரும்பு மற்றும் சின்க் போன்ற தாதுக்களை உடல் உறிந்து கொள்வதற்கு உதவுகிறது.
மேலும் படிக்க: சருமத்தின் பொலிவை இயற்கையாக அதிகரிக்கலாம்; ஒரே ஒரு கிச்சன் பொருள் போதும்
பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகள் போன்றவை புரதம் நிறைந்தவை மட்டுமல்ல. ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இவற்றில் நிறைந்துள்ளன. உதாரணமாக, பாதாம் வைட்டமின் ஈ-ஐ வழங்குகிறது. இதில் உள்ள அன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கின்றன. சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
பால், தயிர் மற்றும் பாலாடைக் கட்டி (Cheese) போன்ற பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இவை இரண்டும் முடி ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. புரதம் முடியின் அமைப்புக்கு உதவுகிறது. அதே நேரத்தில், கால்சியம் முடி வளர்ச்சி மற்றும் வலிமையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சால்மன், மத்தி போன்ற மீன்களில் புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. இவை உச்சந்தலைக்கு ஊட்டமளித்து வீக்கத்தை குறைக்கின்றன. மீன் வகைகளில் வைட்டமின் டி காணப்படுகிறது. இவை முடியின் வளர்ச்சியை தூண்டுகின்றன.
இந்த எளிய புரத உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் முடிக்கு வலிமை மற்றும் ஆரோக்கியத்தை அளித்து வேகமான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com