
நீளமான, அடர்த்தியான, பட்டுப் போன்ற கூந்தலை பெற வேண்டும் என்பது பலரின் கனவு. முடி உதிர்வு மற்றும் வளர்ச்சிக் குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு, நம்முடைய பாரம்பரிய முறையில் ஒரு அற்புதமான தீர்வு உள்ளது. அதன்படி, தேங்காய் பால் பயன்படுத்தி இதற்கு நாம் தீர்வு காணலாம்.
மேலும் படிக்க: Hair care tips: உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்த உதவும் 8 எளிய குறிப்புகள்
தேங்காய் பால் என்பது வெறும் சுவைக்கான பானம் மட்டுமல்ல; இது வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் களஞ்சியம் போன்றது. இந்த சத்துகள் முடியின் வேர்க்கால்களுக்கு பலம் அளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. எந்த விதமான செயற்கை இரசாயனங்களும் இன்றி, தேங்காய் பாலை பயன்படுத்தி உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
முடி வளர்ச்சியை தூண்ட, முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, சிறிது தேங்காய் பாலை எடுத்து, அதை உங்கள் உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த மசாஜ், முடியின் வேர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஊட்டச்சத்துகள் ஆழமாக செல்ல உதவுகிறது. உச்சந்தலை மட்டுமல்லாமல், தேங்காய் பாலை உங்கள் கூந்தலின் ஒவ்வொரு பகுதியிலும் சமமாக பூச வேண்டும். இதனால் கூந்தல் வேர் முதல் நுனி வரை பலம் பெற்று உதிர்வது குறையும்.

தேங்காய் பாலை உச்சந்தலையிலும், கூந்தலிலும் தடவிய பிறகு, அதை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த அவகாசம், தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் கூந்தலின் உள்ளே ஆழமாக சென்று ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது.
மேலும் படிக்க: இளநரை பிரச்சனைக்கு ஈசி தீர்வு: வீட்டிலேயே இந்த எண்ணெய்யை தயாரிப்பது எப்படி?
கூந்தலுக்கு கூடுதல் ஊட்டமும், ஈரப்பதமும் தேவைப்பட்டால், தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யை கலந்து பயன்படுத்துங்கள். இந்த கலவை கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மிதமான சுடுதண்ணீரில் குளித்து விடலாம். தேவைப்பட்டால் மிதமான ஷாம்பூ பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேங்காய் பாலை வாரம் ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், முடி உதிர்வது மற்றும் பிளவுபடுவது தடுக்கப்பட்டு, ஆரோக்கியமான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. கூடுதல் வளர்ச்சியை பெற, தேங்காய் பாலுடன் சிறிது கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். கற்றாழை உச்சந்தலையை இதமாக்குவதுடன், முடி வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.
உங்கள் கூந்தல் பராமரிப்பு முறையில் தேங்காய் பாலை தொடர்ந்து பயன்படுத்துவது, நாளடைவில் உங்கள் முடி அடர்த்தியாகவும், பலமாகவும், அதிக பொலிவுடனும் மாறுவதைக் காண உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com