Juice For Reduce Thyroid: பெண்களை அச்சுறுத்தும் தைராய்டு நோயை குறைக்கும் ஜூஸ்!

உலகில் கோடிக்கணக்கான பெண்கள் பெரிதும் பாதிக்கபட்டிருக்கும் தைராய்டு நோய் பிரச்னையை குறைக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். 

women affect thyroid ()

தற்போதைய பெண்களிடத்தில் பரவலாக காணப்படும் நோய் தைராய்டு. 25 வயது முதல் 40 வயது பெண்கள் வரை இந்த தைராய்டு நோயால் அதிகம் பாதித்து வருகின்றனர் குறிப்பாக திருமணம் ஆன பின்பு பல பெண்களுக்கு இந்த தைராய்டு பிரச்சனை வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தைராய்டு நோய் பிரச்சினையால் பத்து பெண்களில் ஒரு பெண்கள் கட்டாயம் பாதிக்கப்பட்டு இருப்பார். அந்த அளவிற்கு தைராய்டு நோய் பிரச்சனை வளர்ந்துள்ளது. மருத்துவ ஆய்வின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் உள்ளது.

தைராய்டு இருப்பதே தெரியாது

இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் தைராய்டு நோய் நமக்கு உள்ளது என்பது பல பெண்களுக்கு தெரியாது அந்த அளவிற்கு இந்த நோய் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு தெரியாமலேயே தாக்குதலை ஏற்படுத்தும். திருமணம் ஆகி கருவுற்ற பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் என வளர்ச்சி ரீதியாக தைராய்டு நோய் பரவலாக காணப்பட்டு வருகிறது. இந்த தைராய்டு பிரச்சனையை சரி செய்ய பல பெண்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து மருத்துவர்களை அணுகி தினசரி மாத்திரைகளை போட்டு சலித்து போய் இருப்பார்கள்.

  gettyimages  ()

பெண்களை அச்சுறுத்தும் தைராய்டு

தைராய்டு என்பது கழுத்தின் கீழ்ப் பகுதியின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், அது நம் உடலில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. ஆனால், அதில் தொந்தரவு ஏற்பட்டால், சோர்வு, முடி உதிர்தல், உடல் எடை அதிகரிப்பு, சளி போன்ற பல அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

தைராய்டு நோயின் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சத்தான மற்றும் சமச்சீரான உணவு தைராய்டு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவாது, ஆனால் சரியான மருந்தை எடுத்துக் கொண்டால், அறிகுறிகளை கண்டிப்பாக குறைக்கலாம். அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இதன் அறிகுறிகளைக் குறைக்க உதவும். தைராய்டு நோய் சிகிச்சையில் பயனுள்ளதாக நிரூபிக்க முடியும். எனவே தாமதிக்காமல், தைராய்டில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் ஒரு சாறு பற்றி தெரிந்து கொள்வோம்.

தைராய்டை குறைக்கும் வீட்டு வைத்தியம்

தைராய்டு பிரச்சனையை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளது இதை நீங்கள் சரியான அணுகு முறையில் செய்து வந்தால் தைராய்டு நோய் பிரச்சனைகளில் இருந்து சில காலங்களில் விடுபடலாம். அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொண்டு எளிய முறையில் வீட்டு வைத்தியத்தில் இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

dbbbcbbaedeece x

தைராய்டு ஜூஸ் 1

தேவையான பொருட்கள்

  • ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 1 மாதுளை,
  • 1 கேரட்,
  • 1 டீஸ்பூன் பூசணி விதைகள்,
  • 1 டீஸ்பூன் சூரியகாந்தி விதைகள்.

செய்முறை

200மிலி தண்ணீர் எடுத்து கொள்ளவும் இப்போது விதைகளைத் தவிர மற்ற அனைத்தையும் ஒரு ஜாடியில் போட்டு அரைக்கவும். இப்போது விதைகளை மேலே போட்டு அரைக்கவும். தைராய்டு ஜூஸ் தயார். இதை தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் தாராளமாக தினமும் குடிக்கலாம்.

தைராய்டு ஜூஸ் 2

தேவையான பொருட்கள்

  • 1 கிளாஸ் சாதாரண தண்ணீர்,
  • 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்,
  • 8-10 கறிவேப்பிலை,
  • ஒரு கைப்பிடி உலர்ந்த ரோஜா இதழ்கள்.

செய்முறை

தைராய்டு நோயாளிகளுக்கு மூலிகை நீர் தயாரிக்க, முதலில் தண்ணீர், கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து 5 முதல் 7 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். ஆறியதும் அல்லது வெதுவெதுப்பானதும் வடிகட்டி எடுத்து சாப்பிடவும்.

மேலும் படிக்க:பெண்களைப் பாதிக்கும் தைராய்டு; பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP