herzindagi
image

உங்கள் உதடுகள் வறண்டு போவதை தடுக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறை

உங்கள் உதடுகள் வறண்டு போவதை தடுக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம். இவை உங்கள் உதடுகளின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
Editorial
Updated:- 2025-11-03, 13:03 IST

குளிர்காலமாக இருந்தாலும் சரி, கோடைக்காலமாக இருந்தாலும் சரி, சிலருக்கு உதடு வறண்டு போவதும், வெடிப்பு விழுவதும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கும். உதடுகளின் மென்மையான தோல் விரைவாக ஈரப்பதத்தை இழக்கும். இந்த சிக்கலை தீர்க்க, உங்கள் சமையலறையிலேயே கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: உங்கள் சருமம் பொலிவு பெற வேண்டுமா? இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க

 

தேன்:

 

இயற்கையான சிறந்த ஈரப்பதமூட்டிகளில் தேன் ஒன்றாகும். இதில் அன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது வெடிப்புள்ள உதடுகளை குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. படுக்கைக்கு செல்வதற்கு முன், உங்கள் உதடுகளில் சிறிது தேனை தடவி அப்படியே வைத்திருக்கலாம். இவ்வாறு செய்தால் டெட் செல்கள் அனைத்தும் நீங்கி விடும். பின்னர், காலையில் சிறிது வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

Honey

 

நெய் மற்றும் தேங்காய் எண்ணெய்:

 

தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை நன்கு ஈரப்பதம் அளிப்பவை. இவை வறண்ட உதடுகளை விரைவில் சரிசெய்ய உதவுகின்றன. கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்தக் கலவை, ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது மற்றும் உதடுகளின் மென்மையான தடுப்பை பலப்படுத்துகிறது. படுக்கைக்கு செல்வதற்கு முன், இதனை உதட்டின் வறண்ட பகுதியில் மசாஜ் செய்யலாம். இதன் மூலம் உதடுகளில் உள்ள எரிச்சல் குறையும்.

மேலும் படிக்க: சருமத்தின் பொலிவை இயற்கையாக அதிகரிக்கலாம்; ஒரே ஒரு கிச்சன் பொருள் போதும்

 

கற்றாழை:

 

உங்கள் உதடுகள் புண் அல்லது வெடிப்புகளுடன் இருந்தால், கற்றாழை ஜெல் மருந்தாக செயல்படும். இது மிகவும் இதமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். மேலும், இது சேதமடைந்த சரும திசுக்களை சரிசெய்ய உதவுகிறது. இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக சிறிதளவு கற்றாழையை உதட்டில் தடவலாம். இது உதட்டிற்கு ஈரப்பதம் அளித்து வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது.

Aloe vera gel

 

பாதாம் எண்ணெய்:

 

சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது பாதாம் எண்ணெய். இதில் வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. படுக்கைக்கு செல்வதற்கு முன், இரண்டு அல்லது மூன்று துளிகள் பாதாம் எண்ணெய்யை உதடுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். இது வறட்சியை குறைக்கும்.

 

இவற்றை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் உதடுகள் வறண்டு போவதை தடுக்க முடியும். மேலும், ஈரப்பதத்தையும் தக்க வைக்கலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com