herzindagi
image

கருவளையங்களை போக்க சிம்பிள் தீர்வு; இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம்

கருவளையங்களை எளிய வீட்டு வைத்திய முறைகள் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரையில் காண்போம். இதனை வீட்டில் இருக்கக் கூடிய எளிமையான பொருட்களை பயன்படுத்தி நம்மால் செய்ய முடியும்.
Editorial
Updated:- 2025-10-15, 11:40 IST

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான சரும பராமரிப்பு முறை மிகவும் அவசியம். குறிப்பாக, கண்களுக்குக் கீழே உள்ள மென்மையான சருமத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கு கருவளையங்கள் காணப்படுகின்றன. 

மேலும் படிக்க: Chia seed: அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இந்த 5 சியா விதை ஹேர்பேக்குகளை பயன்படுத்தவும்

 

வாழ்க்கை முறை, சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நமது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். அதற்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய வீட்டு வைத்திய முறை குறித்து இதில் பார்க்கலாம்.

 

பாதாம் எண்ணெய்:

 

பாதாம் எண்ணெய்யில் அன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது கருவளையங்களை குறைக்க உதவுகிறது. உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு, தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், ஒரு சில துளிகள் பாதாம் எண்ணெய்யை எடுத்து கண்களுக்கு கீழே மெதுவாக மசாஜ் செய்யவும். இதை தினமும் செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.

 

வெள்ளரிக்காய்:

 

வெள்ளரிக்காயில் இயற்கையான நீர்ச்சத்து மற்றும் சரும துளைகளை இறுக்கும் தன்மை இருப்பதால், இது கருவளையங்களின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. வெள்ளரிக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி, சில நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர், இந்த துண்டுகளை உங்கள் கண்களின் மீது 10 நிமிடங்கள் வைத்து ஓய்வெடுக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.

Cucumber

மேலும் படிக்க: சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடிக்கவும்

 

உருளைக்கிழங்கு:

 

உருளைக்கிழங்கில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள், கருவளையங்கள் உட்பட சருமத்தில் ஏற்படும் நிற மாற்றங்களை குறைக்க உதவுகின்றன. உருளைக்கிழங்கை இரண்டு துண்டுகளாக வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும். பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

 

பன்னீர்:

 

இயற்கையான இந்த மூலப்பொருள், வைட்டமின் ஏ சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. இது கருவளையங்களை போக்க மிகவும் ஆற்றல் மிகுந்த தீர்வுகளில் ஒன்றாகும். சிறிய துண்டு காட்டனை பயன்படுத்தி, பன்னீரை கண்களின் சுற்றியுள்ள பகுதிகளிலும், கீழேயும் மிருதுவாக தடவலாம். இவ்வாறு இரவு நேரத்தில் செய்து விட்டு காலையில் கண்களை கழுவி விடலாம்.

Rosewater

 

கற்றாழை ஜெல்:

 

கற்றாழை பலவிதமான சரும பிரச்சனைகளை குணப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இது கண்களுக்கு கீழே உள்ள மென்மையான சருமத்தை சரி செய்ய உதவுகிறது. இரவில் முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, ஒரு மெல்லிய அடுக்காக கற்றாழை ஜெல்லியை தடவவும். இது சருமம் சீராகவும், நீர்ச்சத்தை பெறவும் உதவுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com