குழந்தைகளுக்கு டயப்பர் அவசியமா ?
துணி நாப்கின், டயப்பர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் சம்மேளனம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் பச்சிளம் குழந்தை முதல் ஒரு வயது குழந்தை வரை டயப்பர் பயன்பாடு, எத்தனை முறை மாற்ற வேண்டும், டயப்பர் பயன்பாடு தேவையா ? இல்லையா போன்ற விவரங்கள் உள்ளன.
முன்பெல்லாம் டயப்பர் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது துணி நாப்கின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. பச்சிளம் குழந்தைகளுக்கு துணி நாப்கின் கட்டிவிடுவது நல்லது. இதை நீங்கள் உபயோகப்படுத்திய பிறகு கழுவி வெயிலில் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
டயப்பர், நாப்கின் மாற்றும் நேரம்
- பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை துணி நாப்கின் மாற்றிவிடுங்கள்.
- 4-5 மாத குழந்தைகளுக்கு துணி நாப்கினை 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது. இதே தான் டயப்பர் பயன்பாட்டுக்கும்.
- டயப்பரில் உள்ள ஜெல் ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும். டயப்பர் செயற்கை பாலிமர் மற்றும் செல்லுலோஸ் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
டயப்பர் பயன்பாட்டின் பிரச்னை ?
குழந்தை சிறுநீர் 2-3 மணி நேரத்திற்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் மலம் கழித்தால் டயப்பரின் ஜெல் மற்றும் மலம் சேர்ந்து ரசாயன எதிர்வினை உண்டாகி டயப்பர் சொறி பிரச்னை குழந்தைக்கு உண்டாகும். தோல் அரிப்பால் புண் ஏற்படும். குழந்தையின் மாதம் அல்லது வயதிற்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5-6 டயப்பர் அல்லது துணி நாப்கின் மாற்ற வேண்டும்.
- எல்லா நேரமும் குழந்தை டயப்பர் அணிவது நல்லதல்ல. குழந்தைக்கு காற்றோட்டமான சூழலையும் கொடுக்க வேண்டும். டயப்பர் பயன்படுத்தும் முன் தேங்காய் எண்ணெய்யை தோல் மீது தடவுங்கள்.
- குழந்தையின் சிறுநீர், மலத்தை துடைக்க பேபி வைப்ஸ் பயன்படுத்தாமல் காட்டன், ஈரமான துணியால் துடைக்கலாம். வைப்ஸில் ஆல்கஹால் கலந்திருக்கும்.
- குழந்தையின் பின்புறத்தில் துடைக்கும் போது துணியால் ஒத்தி ஒத்தி எடுக்கவும்.
குழந்தையை சரியாக கவனித்து கொள்ள முடியாதவர்களே டயப்பர் பயன்படுத்துவார்கள் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation