herzindagi
image

Pregnancy Care: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்; மகிழ்வுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் அதிமாக இருக்கும் போது கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல கருவில் உள்ள குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறைமாத குழந்தைகள் பிறப்பதற்குக்கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதால் வாழ்வியல் நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-12-18, 00:15 IST

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம்:


யோகா அல்லது உடற்பயிற்சி:

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு உடல் சோர்வை ஏற்படுத்துகிறது. எந்த வேலையையும் சரி செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், யோகா அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வாக்கிங், தியானம், ஜாக்கிங் போன்ற சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன நிலையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.

 

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் உடல் சோர்வாகிறதா? கர்ப்பிணிகள் மறக்காமல் இந்த உணவுகளைச் சாப்பிடுங்க!

சரிவிகித உணவுகள்:

உடல் ஆரோக்கியத்துடனும், மன அழுத்தமும் இன்றி இருக்க வேண்டும் என்றால், கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஊட்டச்சத்துக்கள் சரிவிகித உணவுகள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பழங்கள், காய்கறிகள், திரவ உணவுகள் அதிகமாக சாப்பிட வேண்டும். பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: Pregnancy Tips: கர்ப்ப காலத்தில் ஏன் கால் வீக்கம் ஏற்படுகிறது? குணப்படுத்த எளிய வீட்டு வைத்தியம்!

நல்ல தூக்கம்:

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால், முதலில் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். சராரியாக ஒரு நாளைக்கு 7 அல்லது 9 மணி நேரமாவது தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நல்ல தூக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com