Holi 2024 : வண்ணங்களின் பண்டிகையான ஹோலியின் வரலாறு!

வட இந்தியாவில் தீபாவளிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்றாகும். இது தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் இந்து பண்டிகையாகும்.

holi date
holi date

வண்ணங்களின் பண்டிகையான ஹோலி வரும் 25ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாக உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் இந்த பண்டிகை ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஹோலி கொண்டாட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. ஹோலிக்கு முந்தைய நாள் சோட்டி ஹோலி என்று சொல்லப்படுகிறது. இது தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கிறது. ஹோலியன்று மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைபூசி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஹோலி கொண்டாட்டத்தின் வரலாறு, முக்கியத்துவம் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

holi festival of colors

ஹோலி 2024 வரலாறு

ஹோலி என்பது கிருஷ்ண பகவானும் ராதையும் பகிர்ந்து கொண்ட உன்னதமான பண்டிகையை கொண்டாடும் பண்டிகையாகும். ஹோலி வசந்த காலத்தின் வருகை மற்றும் குளிர்காலத்தின் முடிவை கொண்டாடும் அறுவடைத் திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது. புராணங்களின்படி ராதை மிக அழகாகவும், கிருஷ்ணர் கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நிறம் காரணமாக ராதா தன் காதலை ஏற்றுக்கொள்வாளா என கவலைப்பட்ட கிருஷ்ணர் தாய் யசோதையிடம் இது பற்றி கூறியுள்ளார். யசோதை ஒரு முறை கேலியாக ராதையின் முகத்தில் வர்ணம் பூசி விட்டால் நிற வித்தியாசம் தெரியாது என கூறவே கிருஷ்ணர் ராதையின் முகத்தில் குலால் பூசினார். இதுவே ஹோலி கொண்டாட்டத்தின் தொடக்கமாகும்.

ஹோலி கொண்டாட்டம் தொடர்பாக மற்றொரு புராணக் கதையும் இருக்கிறது. இது மன்னன் இரணியகசிபு பற்றியதாகும். புராணங்களின்படி இரணியகசிபுவுக்கு ஒரு வரம் வழங்கப்பட்டது. அது மனிதர்களும், விலங்குகளும் இரணியகசிபுவை கொல்ல முடியாது என்பதே. இதனால் பலரும் இரணியகசிபுவுவை வணங்க தொடங்கினர். ஆனால் தனது மகன் விஷ்ணுவின் பக்தராக மாறி வணங்க மறுத்ததால் சகோதரி ஹோலிகாவிடம் இறுதிச்சடங்கு நிகழ்வு ஒன்றின் போது அவனை கொலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

நெருப்பு தன் மீது படாமல் இருக்க ஹோலிகா தன்னிடம் ஒரு துணியை கொடுக்க இரணியகசிபு திட்டமிட்டு இருந்தார். இதிலிருந்து தன்னை காப்பாற்றிட இரணியகசிபு மகன் பிரஹலாதன் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார். பலமான காற்றை அனுப்பி ஹோலிகாவிடம் இருந்த துணியை பிரஹலாதனை சென்றடைய செய்து அவனை காப்பாற்றினார் விஷ்ணு. இது ஹோலிகா தஹான் என ஹோலிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. தீமைக்கு எதிரான வெற்றியாக ஹோலிகா தஹான் ஹோலிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது.

ஹோலி 2024 கொண்டாட்டம்

மதுரா, பிருந்தாவன், கோவர்தன், கோகுலம் உள்ளிட்ட பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடைய இடங்களில் ஹோலி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஹோலிகா தஹானில் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கும் வகையில் மக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள். மறுநாள் சீக்கிரமாக எழுந்து வண்ணங்கள் அல்லது குலால் பூசி விளையாடுவார்கள். குழந்தைகள் பலூன்கள் மற்றும் பொம்மை துப்பாக்கிகளில் தண்ணீரை வைத்து தங்கள் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP