
ரமலான் தொடங்கியவுடன் முஸ்லிம்கள் முழு மாதமும் நோன்பு நோற்பார்கள், ஆன்மீக சிந்தனை, சுய ஒழுக்கம் மற்றும் உயர்ந்த பக்தி ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். ரமலான் மாதம் தொடங்கி நோன்பை முறையாகக் கடைப்பிடித்து பின் பிறை தெரியும் கடைசி நாளை ஈத் உல் ஃபிர் என்று இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
மேலும் படிக்க: ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் ஷாஹி துக்டா செய்வது எப்படி?

இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் விதமாக இந்த நோன்பைக் கொண்டாடப்படுகிறது. ரமலான் அரபு மூலமான ரமிடா அல்லது அர்-ரமத் என்பதிலிருந்து உருவானது, இது கொளுத்தும் வெப்பத்தை' குறிக்கிறது. ஷஹாதா (நம்பிக்கை), ஸலாத் (தொழுகை), ஜகாத் (தானம் செய்தல்), சவ்ம் (நோன்பு) மற்றும் ஹஜ் (யாத்திரை) இஸ்லாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நோன்பு சூரியன் உதிப்பது முதல் சூரியன் மறையும் உணவு, தண்ணீர், எச்சில் கூட விழுங்காமல் கடுமையாக நோம்பு இருப்பார்கள்.

இந்த ஆண்டு புனித ரமலான் பண்டிகை மார்ச் 12 முதல் உலக முழுவதும் நோன்பு கடைப்பிடிக்கத் தொடங்கியது. அனைவரும் பிறை ஏப்ரல் 9 தேதி தெரியும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று தள்ளிப் போய் ஏப்ரல் 10 தேதி தெரியும் என்பதால் நாளை மறு நாள் (ஏப்ரல் 11ம்) ஈத் உல் ஃபிர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் பிறை வெளிப்படுவதில் சற்று வேறுப்படுகள் உள்ளதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஏப்ரல் 10 ஆம் தேதி ரமலான் கொண்டாடப்படவுள்ளது.
மேலும் படிக்க: ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் மாம்பழ பிர்னி செய்வது எப்படி?
ரமலான் ஆசீர்வாதங்களின் மாதம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் எந்த ஒரு நற்செயலுக்கும் ஒரு சதவீதம் வெகுமதி கிடைக்கும் என்றால், ரமலான் மாதத்தில் 70 சதவீதம் வெகுமதி கிடைக்கும் என்ற நம்பப்படுகிறது. நரகத்தின் கதவுகளும் இந்த மாதத்தில் மூடப்படும். இந்த நேரத்தில், மக்கள் 12 முதல் 14 மணி நேரம் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள், இது உடல் ரீதியாகச் செரிமான அமைப்புக்கு ஓய்வு அளிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதை உங்கள் சமூக ஊடகக் கைப்பிடிகளில் பகிர மறக்காதீர்கள். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com