shahi tukda recipe

Shahi Tukda Recipe: ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் ஷாஹி துக்டா செய்வது எப்படி?

வீட்டில் எளிய முறையில் ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் ஷாஹி துக்டா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-04-04, 21:01 IST

ரம்ஜான் பண்டிகை என்று சொன்னாலே நம்மில் பலருக்கும் முதலில் நினைவு வருவது மசூதி பக்கம் உள்ள சாலைகளில் அமைந்திருக்கும் அயல்நாட்டு உணவு வகைகளும் ஸ்வீட் வகைகளும் தான். இந்த ரம்ஜான் காலத்தில் சிக்கன் ஹலீம் மற்றும் மட்டன் ஹலீம் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இதற்க்கு அடுத்த பிரபலமான உணவு இந்த முகலாய ஸ்வீட்ஸ். ஷாஹி துக்டா, பிர்னி, ஷீர் குருமா, டபிள் கா மீட்டா, மலாய் ரப்டி, அரிசி கீர் போன்ற அரபிக் இனிப்பு வகைகள் இந்த இப்தார் காலத்தில் மிகவும் பிரபலம். இந்த நிலையில் நாம் வீட்டில் எளிதாக செய்யக்கூடிய இப்தார் ஸ்பெஷல் இனிப்பு ஷாஹி துக்டா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுவையான ஷாஹி துக்டா செய்ய தேவையான பொருட்கள்:

ரப்டி செய்ய:

  • பால் அரை லிட்டர் 
  • அரை கப் சர்க்கரை 
  • குங்குமப்பூ 15-20 
  • கால் கப் நறுக்கிய பாதாம் 
  • கால் கப் நறுக்கிய முந்திரி 
  • கால் கப் நறுக்கிய பிஸ்தா 

மேலும் படிக்க: சுவையான பூசணிக்காய் கப் கேக் செய்வது எப்படி?

சர்க்கரை பாகு செய்ய:

  • சிறிதளவு உப்பு 
  • 200 மில்லி தண்ணீர் 
  • ஒரு கப் சர்க்கரை
  • நாலு துண்டு பிரட் 
  • தேவையான அளவு நெய்

கார்னிஷ் செய்ய:

  • ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதம் 
  • ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி 
  • ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பிஸ்தா

சுவையான ஷாஹி துக்டா செய்முறை:

shahitukda

முதலில் சாண்ட்விச் செய்வது போல ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் முக்கோண வடிவில் இரண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி அதை சுண்ட காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பால் பாதி அளவாக குறையும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். இதில் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறவும். இப்போது இதில் நறுக்கி வைத்த பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரியை சேர்த்து கிளறி விடுங்கள். அடி பிடிக்காதவாறு நன்கு கிளறிக் கொண்டே வந்தால் கெட்டி பதத்தில் ரப்டி தயார். இதற்குப் பிறகு வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை பாகை தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்த பிறகு ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது சர்க்கரைப் பாகு ரெடி. பாதி துண்டுகளாக வெட்டி வைத்த பிரட் துண்டுகளை நெய்யில் வறுத்து எடுக்க வேண்டும். குறிப்பாக வறுக்கும்போது நெய் சூடாக இருக்க வேண்டும். இந்த பிரட் துண்டுகளை கோல்டன் பிரவுன் கலரில் வறுக்க வேண்டும். இப்போது நெய்யில் வறுத்து எடுத்த பிரட் துண்டுகளை சர்க்கரைப்பாகில் இரண்டு நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும் சர்க்கரை பாகில் இருந்து பிரட் துண்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நாம் தயாரித்த ரப்டியை ஊற்றி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி விட்டால் ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் சுவையான ஷாஹி துக்டா ரெடி.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com