Akshaya Tritiya 2024 : வீட்டில் செல்வம் பெருக தங்கம் வாங்க உகந்த நேரம்!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் பற்றிய முழு தகவலை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

gold purchase timing in akshaya tritiya

அட்சய திருதியை என்றவுடன் நம் அனைவரது எண்ணத்திலும் நினைவுக்கு வருவது தங்கம். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்ற நம்பிக்கையில் பெண்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

akshaya tririya

அட்சய திருதியை 2024: முக்கியத்துவம்

அட்சய திருதியை என்பது செழிப்பு மற்றும் செழுமையை குறிக்கும் நாள் ஆளும். இந்த நாளில் எந்த ஒரு நல்ல செயலையும் மேற்கொண்டாலும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. புதிய தொடக்கத்திற்கான நாளாக கருதப்படும் அட்சய திருதியை நாளில் புதிய தொழில் தொடங்குவது அல்லது புதிதாக பணியில் சேர்வது நல்லதாக பார்க்கப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் சந்திரன் மற்றும் கிரகங்களின் அதிபதியான சூரியன் மிகவும் பிரகாசிப்பதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் திருமணம் உட்பட சுப காரியங்களை நடத்துவது நல்லது. குறிப்பாக அட்சய திருதியை மகாலட்சுமிக்கு மிகவும் விசேஷமான நாள். தங்கம், வெள்ளி வாங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் சேரும். அட்சய திருதியை என்பதால் பல கடைகள் முன்கூட்டியே திறக்க கூடும். இந்த நாளில் தங்கம் வாங்குவதற்கு மூன்று உகந்த நேரங்கள் உள்ளன.

தங்கம் வாங்க உகந்த நேரம்

  • காலை - 9.30 மணி முதல் 10.20 மணி வரை
  • நண்பகல் - 12.31 மணி முதல் மதியம் 1.31 மணி வரை
  • மாலை - 4.31 மணி முதல் இரவு 7.30 மணி வரை

மகளின் திருமணத்திற்கு நகை வாங்க விரும்புவோர் இந்த நாளில் தங்கம் வாங்கலாம். தங்கம் வாங்கியவுடன் அதை உடனடியாக அணிய வேண்டாம். வாங்கிய தங்கத்தை வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கொடுத்து அவர்களிடம் ஆசி பெற்று நகையை பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பிறகு அணியுங்கள். இதுவே தங்கக் காசு வாங்கும் நபர்களாக இருந்தால் பீரோவில் வைக்கவும்.

அட்சய திருதியை என்பது வாங்கி சேர்க்க வேண்டிய நாள் மட்டுமல்ல தானம் செய்யக் கூடிய நாளும் கூட. காலப் போக்கில் அட்சய திருதியை பற்றிய புரிதல் வேறு விதமாக மாறிவிட்டது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது எவ்வளவு நல்லதோ அதே அளவிற்கு தானம் செய்தால் நம்மிடம் இருக்கும் செல்வங்கள் பெருகும்.

தங்கம், வெள்ளியை தவிர இந்த நாளில் லட்சுமி தேவியுடன் தொடர்புடையை சில விஷயங்களை வாங்க வேண்டும். உப்பு, மஞ்சள் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள். அரிசி, பருப்பு, கோதுமை, புடவை ஆகியவற்றை தானமாக கொடுங்கள். தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம். இருவரை வீட்டிற்குள் அழைத்து அன்னதானம் அளியுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP