பொதுவாகவே நம்மில் அனைவரும் ஏதாவது ஒரு இடத்திற்குப் பயணம் செய்ய வேண்டும் என்று தான் நினைப்போம். ஒரு சிலருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைத்த இடங்களுக்குப் பயணம் செய்வார்கள். அதிலும் தற்போது நாடு முழுவதும் கோடை விடுமுறை விட்டாச்சு. இந்த நாட்களில் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டமிடுவார்கள். வெயிலுக்கு இதமாக குடும்பத்துடன் மலைகளுக்கிடையே பயணம், பாலைவனம் அல்லது கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
இதற்காக பல இடங்களைத் தேடி தேடிக் கொண்டு தான் பலர் இருக்கிறார்கள். இந்த சூழலில் ஏதாவது ஒரு இடத்தைத் தேர்வு செய்து சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் சில விஷயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது போன்ற விஷயங்களைச் செய்யும் பட்சத்தில் கோடை சுற்றுலா உங்களை மேலும் மகிழ்ச்சியாக்கும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
கோடை விடுமுறையை மகிழ்வாக்கும் சில விஷயங்கள்:
தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக ஏதாவது மலை பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் குழந்தைகள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஹிமாச்சல் போன்ற பிரதேசங்களை அதிகம் விருப்பார்கள். குடும்பத்துடன் மலைகளில் நடந்து செல்வதற்கு முன்னதாக எப்போதும் வெப்பநிலையை சரிபார்க்கவும்.
அதிக குளிர், அதிக வெப்பம் இருந்தாலும் உங்களது சுற்றுலாவைப் பாதிக்கும். சில சமயங்களில் மலைகள் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், அத்தகைய சூழ்நிலைகளில் வானிலைக்கு ஏற்ப துணிகளை பேக் செய்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மலைப் பகுதிகளுக்குச் செல்கிறீர்கள்? என்றால் அவர்களுக்குத் தேவையான மாத்திரைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளை உடன் எடுத்து செல்ல வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. மேலும் மலைகளுக்குச் செல்வதற்கு முன்னதாக, மலையேற்றத்திற்கான சூக்கள், செப்பல்கள், தொப்பி போன்றவற்றைக் கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும்.
கடற்கரையில் சுற்றுலா:
மலைவாசஸ்தலங்களுக்கு அடுத்தப்படியாக அனைவரின் தேர்வு கடற்கரையாகத் தான் இருக்கும். கேரளா, கர்நாடகா, மும்பை, பாண்டிச்சேரி போன்ற பல்வேறு பிரசித்திப் பெற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். அதிலும் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் கடலில் ஓடி ஆடி விளையாடும் போது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனாலும் இந்த மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்க வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் குழந்தைகள் கடற்கரையில் வேடிக்கையாக விளையாடும் போது கண்டுக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது. ஜாலியாக விளையாடினாலும் எப்போதும் கவனிப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:சென்னைக்கு மிக அருகே! கோடை வெப்பத்தை தணிக்க சிறந்த 5 நீர்வீழ்ச்சிகள்
இதோடு மட்டுமின்றி நீங்கள் எந்த பகுதிக்குச் சுற்றுலா செல்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும், யாராவது ஒருவர் பொறுப்பேற்று எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் சுற்றுலாவைத் திட்டமிடும் போது நல்ல பயணமாக அமையும். இது போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலே நிச்சயம் கோடை விடுமுறை பெரும் சந்தோஷமாகவே உங்களுக்கு அமையும்.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation