குடும்பத்தை மட்டும் பாதுகாப்பது என்பது பெரிய விஷயமல்ல. இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் சுய நலத்தை விட்டு விட்டு கொஞ்சம் பொது நலத்துடன் பிறக்கு உதவ வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து கொண்டாடப்படும் தினமாக உள்ள உலக மனிதாபிமான தினம். குறிப்பாக தனிப்பட்ட நபர்களின் பெருந்தன்மையை வெளிக்கொணர்வது மட்டுமில்லாது, உலகளவில் மனித நேயம் மற்றும் உதவி எந்தளவிற்குத் தேவை என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக மனிதாபிமான தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால் இன்றைய சூழலில் மனிதாபிமானம் என்பது பல நேரங்களில் கேட்பாடற்றுக் கிடக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்றால் உலக மனிதாபிமான தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மனிதாபிமான தினத்தில் பின்பற்ற வேண்டியவை:
மனிதநேயம்:
மனிதர்களுக்கு உதவி செய்யும் காரியம் என்பது பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வசிக்கும் பகுதியில் அல்லது ஊரில் எங்கேயாவது மனிதனுக்குத் துன்பங்கள் எதுவும் நேர்ந்தால் அதை எப்படி களையவேண்டும்? என்பதை யோசிக்க வேண்டும். நேரிலோ அல்லது சோசியல் மீடியாக்களின் வாயிலாக உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி அதன் மூலமும் அவர்களுக்கு உதவி புரியலாம்.
ஒரு பிரச்சனை நடைபெறுகிறது என்றால், அதை நடுநிலையோடு யோசித்து செய்ய வேண்டும். யார் பக்கம் நியாயம் உள்ளது? எதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்பதை முதலில் யோசித்துக் கொள்ள வேண்டும். இதோடு பாரபட்சமின்மையின்றியும், சுதந்திரத்துடனும் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யக்கூடிய உதவியை ஒரு விளம்பரத்திற்காக மட்டும் செய்யக்கூடாது. மாறாக செய்யக்கூடிய அனைத்து உதவிகளிலும் ஒரு அக்கறையான செயல்கள் இருக்க வேண்டும். இவை தான் மனித குலத்திற்கான முதலீடாக அமைகிறது.
உலக மனிதாபிமான தினம்:
கடந்த 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாகமாக செயல்பட்டு வரும் ஈராக் மற்றும் பாக்தாத் நகரத்தில் உள்ள UN அலுவலகத்தில் நிகழ்ந்த பயங்கரவாத குண்டு வெடிப்பில் பலரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பலரைக் காப்பாற்றி உயிரிழந்த நபர்களின் மனிதாபிமான செயல்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டில் ஐ.நா பொது சபை ஆகஸ்ட் 19 ஆம் தேதியை உலக மனிதாபிமான தினமாக முறைப்படுத்தியது.
Image credit : pexels
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation