கிச்சன் சிங்கில் நாற்றம் அடித்தால் கிச்சனில் நின்று சமைக்க கஷ்டமாக இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை உங்களுக்கு சொல்ல போகிறோம்.
முதலில் உங்கள் கிச்சனில் இருக்கும் சிங்க் தொட்டியில் பேக்கிங் சோடாவை தெளிக்கவும். 5 நிமிடங்களுக்கு பிறகு சிங்க் தொட்டியை பிரஷ் வைத்து நன்கு தேய்க்கவும். குச்சியை வைத்து துளைகளிலும் நன்கு குதித்து விடவும். இறுதியாக தண்ணீரை திறந்து விட்டால் போதும். மொத்த அழுக்கும் வெளியேறி சிங்க் சுத்தமாக மாறிவிடும். துர்நாற்றமும் வீசாது. சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை நீக்க ஆரஞ்சு பழத் தோலையும் பயன்படுத்தலாம். சிங்க் முழுவதும் ஆரஞ்சு தோலை தேய்த்து விடவும். சிறிது நேரம் இப்படியே ஊறவிட்டு பின்பு தண்ணீரை திறந்து விடும். மொத்த துர்நாற்றமும் பறந்து போய்விடும்.
இந்த பதிவும் உதவலாம்:வீட்டில் இருக்கும் சோபாவை சுத்தம் செய்வது எப்படி?
இந்த பதிவும் உதவலாம்:வாஷிங் மெஷினை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள் கிச்சனில் இருக்கும் சிங்க் தொட்டியிலும் துர்நாற்றம் வீசினால் இதுப்போன்ற வழிகளை முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
mages Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com