
குழந்தைகளை கையாள்வது சில நேரங்களில் சவாலாக தெரியலாம். இந்த சூழலில் குழந்தை அடம் பிடிக்கும் போது, கார்ட்டூன் பார்ப்பதற்காக அல்லது விளையாடுவதற்காக ஒரு செல்போனை கொடுப்பது தான் நமக்கு எளிய தீர்வாகத் தெரிகிறது.
ஆனால், இந்த எளிய தீர்வு தான் மெதுவாக அவர்களை செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாவதற்கு வழிவகுக்கிறது. குழந்தைகளை செல்போனில் இருந்து விலக்கி வைத்து, அவர்களுக்கு பயனுள்ள அதேசமயம் வேடிக்கையான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான ஐந்து முக்கியமான வழிகளை இதில் பார்க்கலாம்.
குழந்தைகளின் இயற்கையான ஆர்வத்தை தூண்ட ஒரு சிறந்த வழி துப்பறியும் விளையாட்டாகும். வீட்டில் சில எளிய துப்பறியும் விளையாட்டுகளை உருவாக்குங்கள். அதன் இலக்கை அடைந்தால் சிறிய பரிசுகள் கொடுப்பதாக சொல்லுங்கள். இது குழந்தைகளை ஆர்வத்துடன் வைத்திருக்கவும், உடல்ரீதியாக சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். "பழுப்பு நிறத்தில் உள்ள ஒரு பொருளை கண்டுபிடி" அல்லது "ஒரு கண்ணாடி ஜாடியை கண்டுபிடி" போன்ற எளிய பணிகளை கொடுக்கலாம். இது சுற்றுப்புறத்தை கூர்ந்து கவனிக்கவும், வண்ணங்கள் மற்றும் பொருட்களை பற்றிய அறிவை அதிகரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. இந்த செயல்பாடு செல்போனில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி, சிந்தனை திறனை மேம்படுத்துகிறது.
குழந்தைகளை சுயமாக ஒரு பொருளை அல்லது விஷயத்தை உருவாக்க உதவுவது, அவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் உற்பத்தித்திறனை அளிக்கிறது. இதற்காக சிறிய சமையல் வேலைகளில் ஈடுபடுத்தலாம். இது தவிர, ஒரு மரக்கன்றை நடுவது அல்லது பறவைக்கு தண்ணீர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுத்தலாம். இது இயற்கையுடன் அவர்களை இணைக்கிறது.
செல்போனில் அதிக நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக, அவர்கள் பயனுள்ள ஒன்றில் ஈடுபடுவார்கள். ஒரு செடியை வளர்ப்பது அல்லது ஒரு எளிய உணவை தயாரிப்பது அவர்களுக்கு பொறுப்புணர்வை வளர்க்கிறது.

மேலும் படிக்க: வெளிப்புற விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
வாசிப்பு பழக்கம் என்பது குழந்தை பருவத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான பழக்கங்களில் ஒன்றாகும். ஒரு நூலகத்தில் உறுப்பினராக சேருவது அல்லது புத்தக வாசிப்பு குழுவில் சேருவதற்கான சந்தாவை எடுத்துக் கொடுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தையை வெவ்வேறு கதை வகைகளுக்கும், சக வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்த முடியும். புத்தக வாசிப்பு பழக்கம், செல்போனில் இருந்து விலகி, அவர்களின் கற்பனை திறனை தூண்டுகிறது. புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளவும், மொழித்திறனை மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வழி. புத்தகங்களை படிக்கும் போது கிடைக்கும் அமைதியான நேரம், அவர்களுக்கு ஆழ்ந்த கவனத்தை கொடுக்கிறது.
தினமும் நடந்த விஷயங்களை பற்றி சத்தமாக சொல்லும்படி அவர்களை ஊக்குவிக்கலாம். இல்லையெனில், அவர்கள் மனதில் தோன்றும் கதைகளை வெளிப்படையாக சொல்வதற்கு அறிவுறுத்தலாம். நீங்கள் பொறுமையுடன் அவர்களுக்கு செவிசாய்த்து, அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். தங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அவர்களுக்கு தோன்றும். இது அவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்துகிறது, படைப்பாற்றலை வளர்க்கிறது மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ள பிணைப்பை வலுப்படுத்துகிறது. இந்த கவன ஈர்ப்பு, அவர்கள் செல்போன் தேடுவதை தவிர்க்க உதவும்.

மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
குடும்பமாக சேர்ந்து விளையாடக்கூடிய புதிர் விளையாட்டுகள், குழந்தைகளுக்கு மிகவும் சுவாரஸ்யமானவை. மோனோபோலி (Monopoly), ஸ்கிராபிள் (Scrabble) அல்லது பிக்சனரி (Pictionary) போன்ற விளையாட்டுகள் செல்போனில் இருந்து அவர்கள் கவனத்தை திசைதிருப்பி, குடும்ப ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கின்றன. இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் திறனாய்வு சிந்தனை மற்றும் சமூகத் திறன்களை வளர்க்க உதவுகின்றன. புதிர் விளையாட்டுகள், அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறனை அதிகரிக்கின்றன. இது அவர்களுக்கு பொழுதுபோக்காக அமையும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெரியவர்களை பார்த்து தான் வளர்கிறார்கள். உங்கள் குழந்தைகள் செல்போனை அதிகமாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களும் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப நேரத்தின் போது உங்கள் செல்போனை ஒதுக்கி வைப்பது, குழந்தைகளுக்கான சிறந்த முன்மாதிரியாக அமையும்.
இந்தச் செயல்பாடுகள் உங்கள் குழந்தையின் நேரத்தை ஆக்கப்பூர்வமாக மாற்ற உதவுவதுடன், செல்போனுக்கு அடிமையாவதில் இருந்து அவர்களை மீட்க ஒரு சிறந்த அணுகுமுறையாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com