
பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் தினசரி வழக்கத்தில் படிப்பும், சத்தான உணவும் மட்டுமே மிக முக்கியமானவை. ஆனால், விளையாட்டு என்பது படிப்பு மற்றும் உணவு போலவே குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பது உங்களுக்கு தெரியுமா? வெளிப்புற விளையாட்டுகள் உடலையும், மனதையும் மேம்படுத்தி உணர்வுப்பூர்வமான நலனையும் வளர்க்கின்றன.
மேலும் படிக்க: புரதம் முதல் கீரைகள் வரை: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளின் பட்டியல் - பெற்றோர்களே நோட் பண்ணுங்க
வெளிப்புற விளையாட்டு என்பது ஆடம்பரம் அல்ல. அது வீட்டுப் பாடம் மற்றும் உணவு வேளைகளை போலவே மிக முக்கியமானது. அறிவியல் பூர்வமாக இது உடல் வலிமை, மூளையின் வளர்ச்சி, மனநிலை, சமூக வளர்ச்சி மற்றும் நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது. பெற்றோர்கள் ஏன் வெளிப்புற விளையாட்டை முக்கியமாக கருத வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
உணவு எப்படி உடலை உள்ளிருந்து வளர்க்கிறதோ, அதேபோல வெளிப்புற விளையாட்டு உடலை வெளியிலிருந்து வலுப்படுத்துகிறது. இது ஓடுதல், குதித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. இந்த செயல்பாடுகள் தசைகள், எலும்புகள் மற்றும் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகின்றன. இவை மேம்பட்ட உடல் இயக்கம், உடல் பருமன் குறைப்பு மற்றும் நீண்டகால உடல் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று கூறப்பட்டுள்ளது.

வெளிப்புற விளையாட்டு குழந்தைகளின் ஆர்வத்தையும், சிக்கலை தீர்க்கும் திறனையும், படைப்பாற்றலையும் தூண்டுகிறது. இது குழந்தைகளுக்கு படிப்பதற்கு தேவையான அதே திறன்களை வளர்க்கிறது. வெளிப்புற விளையாட்டு ஒரு "மூளை பயிற்சி" போல செயல்பட்டு, கற்றல் திறனையும், கல்வியின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: Postpartum depression: பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு; தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்
பசுமையான இடங்கள், மன அழுத்தத்தை குறைக்கும் இயற்கையான கருவிகள் ஆகும். வெளிப்புற விளையாட்டு மனக்கவலையை குறைக்கிறது. படிப்பு எப்படி மனதை கூர்மைப்படுத்துகிறதோ, அதேபோல வெளிப்புற விளையாட்டு மனதை அமைதிப்படுத்தி சமநிலைப்படுத்துகிறது.
வெளிப்புற விளையாட்டில் பெரும்பாலும் குழுப்பணி, பேச்சுவார்த்தை மற்றும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கும். இவை பள்ளியிலும், வாழ்க்கையிலும் வெற்றிபெற அத்தியாவசியமான திறன்கள். வெளிப்புற விளையாட்டு எந்த ஒரு பாடப்புத்தகமும் கற்றுத் தராத பாடங்களான பகிர்ந்து கொள்ளுதல், தலைமை தாங்குதல் மற்றும் சமரசம் செய்தல் போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது.

வெளிப்புறத்தில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் விரைவாக தூங்க சென்று, அதிக நேரம் தூங்கி, புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பார்கள். இது கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. வழக்கமான உணவு மற்றும் படிப்பு போலவே, தொடர்ந்து வெளிப்புற விளையாட்டில் ஈடுபடுவதும் குழந்தையின் தினசரி பழக்கவழக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com