herzindagi
image

Parenting ideas: உங்கள் குழந்தையிடம் நல்ல பண்புகளை அதிகரிக்க வேண்டுமா? இந்த 5 குறிப்புகளை பின்பற்றவும்

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை எப்படி கற்றுக் கொடுப்பது என இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை சீரமைக்க முடியும்.
Editorial
Updated:- 2025-11-27, 07:42 IST

குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை. நாம் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை தருவதற்காக பாடுபடுவது போலவே, அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக வளர்ப்பதும் மிக அவசியம். குழந்தைகள் பிற்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்வார்கள், எப்படி சிந்திக்கிறார்கள் என்பதன் அடித்தளம், அவர்கள் வீட்டில் காணும் மற்றும் கற்கும் பழக்க வழக்கங்களில் உள்ளது. 

உங்கள் குழந்தையிடம் நல்ல பண்புகளை வளர்க்கவும், அவர்களின் நடத்தையை சீரமைக்கவும் உதவும் ஐந்து முக்கியமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வளர்ப்பு முறை குறிப்புகளை பற்றி இந்தக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

 

பொறுப்புணர்வை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்:

 

அவர்கள் அன்பான, அக்கறையுள்ள பெரியவர்களாக வளர வேண்டுமெனில், வாழ்க்கையில் பொறுப்புணர்வின் முக்கியத்துவம் என்ன என்பதை ஆரம்பத்திலேயே அவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்குங்கள். பொறுப்பு என்பது, 'நான் இதைச் செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

 

  • உங்கள் குழந்தைக்கு சில சிறிய பொறுப்புகளை வழங்குங்கள். உதாரணமாக, அவர்களுடைய பொம்மைகளை எடுத்து வைப்பது, செடிகளுக்கு நீர் ஊற்றுவது, அல்லது ஒரு பொருளை பாதுகாப்பாக வைத்திருப்பது போன்ற செயல்களை கொடுக்கலாம். இது ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.

Parenting tips

 

  • பொறுப்பை ஏன் நிறைவேற்ற வேண்டும் என்பதையும், அது மற்றவர்களுக்கும் தங்களுக்கும் எவ்வாறு உதவுகிறது என்பதையும் பொறுமையாக விளக்குங்கள். உதாரணமாக, "உன் புத்தகங்களை நீ எடுத்து வைக்காவிட்டால், அதை தேடி நேரத்தை வீணடிப்பாய் அல்லது அது சேதமடையலாம்" என்று விளக்கலாம்.

 

யதார்த்தமான எதிர்பார்ப்புகளை நிர்ணயுங்கள்:

 

உங்கள் குழந்தை தவறு செய்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை பெற்றோர் நினைவில் கொள்வது அவசியம். அவர்கள் நீதிநெறி விழுமியங்களின் முழுமையான வடிவமாகவோ அல்லது குறைபாடற்ற நடத்தை கொண்டவர்களாகவோ இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்காதீர்கள்.

 

  • உங்கள் குழந்தை தவறு செய்யும்போது, அவர்களிடம் பொறுமையுடன் பேசுங்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை அமைதியாக புரிய வைக்கவும்.

 

  • குழந்தைகளிடம் குரலை உயர்த்துவது அல்லது கூச்சலிடுவது விஷயங்களை மோசமாக்குமே தவிர, ஒருபோதும் உதவாது. அது அவர்களை பயமுறுத்தலாம் அல்லது அவர்கள் கோபத்தை மட்டுமே கற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

 

  • நீங்கள் தவறுதலாக கோபமாக பேசினாலோ அல்லது கத்தினாலோ, உங்களுடைய குழந்தையிடம் மன்னிப்பு கேட்பதற்கும் தயங்காதீர்கள். இது, பெரியவர்களும் தவறு செய்யலாம் என்பதையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்பது அவசியம் என்பதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்.

மேலும் படிக்க: குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

நேர்மறையான சூழலை உருவாக்குங்கள்:

 

உங்கள் குழந்தை பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலில் வளர்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வீடு என்பது மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் வசதியான இடமாக இருக்க வேண்டும்.

 

  • வீட்டில் சண்டையிடுவது, சத்தமாக பேசுவது அல்லது எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தைகள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை விட, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கூர்ந்து கவனிக்கிறார்கள்.

 

  • பெற்றோர் எப்போதும் நம்பிக்கையான மனப்பான்மையுடன் இருக்க முயலுங்கள். நீங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால், அந்தக் குழந்தை அந்த உணர்வை பிரதிபலிக்கும். நேர்மறை சூழல் அவர்களுக்கு சிறந்த நடத்தையின் மாதிரியை காட்டுகிறது.

Parenting ideas

 

  • அவர்கள் பயமில்லாமல், தங்கள் தேவைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான உணர்வை வீட்டில் உருவாக்க வேண்டும்.

 

குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டும்:

 

உங்கள் நாள் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிட ஒரு குறிப்பிட்ட சமயத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியம். இது அவர்களின் நடத்தையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

 

  • தினசரி சிறிது நேரமாவது அவர்களின் உலகத்திற்குள் செல்லுங்கள். அவர்கள் பள்ளியில் எப்படி செயல்பட்டார்கள் அல்லது நண்பர்களுடன் என்ன நடந்தது என்று பேசுவதற்கு அவர்களை ஊக்குவிக்கவும்.

 

  • அவர்கள் பேசுவதை கேட்பது, அவர்கள் பள்ளியில் அல்லது நண்பர்கள் இடையே எப்படி இருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு தெளிவான பார்வையை உங்களுக்கு வழங்கும். இதன் மூலம், ஏதேனும் தவறான நடத்தை உருவாகி வருகிறதா என்பதையும் நீங்கள் ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

மேலும் படிக்க: உறங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த உதவும் எளிய குறிப்புகள்

 

குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கவும்:

 

உங்கள் குழந்தைகள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு இடத்தை கொடுங்கள். அவர்களின் மனதில் இருப்பதை பேச அவர்களை அனுமதியுங்கள். பெற்றோராக, அனைத்து விஷயங்களையும் அவர்களின் பார்வையில் இருந்து காண முயற்சி செய்யுங்கள்.

 

  • நீங்கள் உங்கள் குழந்தையிடம் மரியாதையுடன் பேசினால், அவர்களும் பதிலுக்கு மரியாதை அளிக்க கற்றுக் கொள்வார்கள். அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்பது, அவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

 

  • குடும்ப முடிவுகளில், அவர்களுக்கு பொருத்தமான இடங்களில் அவர்களின் கருத்துகளை கேளுங்கள். உதாரணமாக, "இந்த வார இறுதியில் நாம் என்ன செய்யலாம் என்று நீ நினைக்கிறாய்?" அல்லது "உன் அறையை எந்த நிறத்தில் பெயிண்ட் செய்யலாம்?" போன்ற கேள்விகளை கேட்கலாம்.

 

  • அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் போது, அவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருப்பதாகவும், அவர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பதாகவும் உணர்கிறார்கள். இதுவே, சமூகத்தில் தைரியமாகவும், பொறுப்புடனும் பேச அவர்களுக்கு பயிற்சியாக அமையும்.

 

இவை அனைத்தையும் உங்கள் குழந்தை வளர்ப்பு முறையில் செயல்படுத்துவதன் மூலம் அவர்களை நற்பண்புகளுடன் வளர்க்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com