குழந்தைப் பருவம் முதல் மெனோபாஸ் காலம் வரை; பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய தடுப்பூசிகளின் பட்டியல்

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான தடுப்பூசிகளின் பட்டியல் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதில் ஒரு பெண், குழந்தைப் பருவத்தில் இருந்து மெனோபாஸ் காலம் வரை செலுத்தி கொள்ளக் கூடிய தடுப்பூசிகளின் விவரம் இடம்பெற்றுள்ளது.
image
image

தடுப்பூசி என்பது ஒரு நபரின் வாழ்க்கைக்கு இன்றி அமையாதது ஆகும். ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கு தடுப்பூசிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க, தடுப்பூசிகள் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கின்றன. ஒரு பெண் பிறந்தது முதல், கர்ப்ப காலம் மற்றும் மெனோபாஸ் காலம் வரை போடப்படும் சரியான தடுப்பூசிகள் கடுமையான நோய்களில் இருந்து அவர்களை காக்கின்றன. மேலும், இது அந்தப் பெண்ணை மட்டும் அல்லாமல், அவரது குடும்பம் மற்றும் வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்கிறது. அந்த வகையில் முக்கியமான தடுப்பூசிகள் குறித்து இந்தக் குறிப்பில் காண்போம்.

பிறப்பு முதல் இளமைப் பருவம் வரை:

தேசிய தடுப்பூசி திட்டத்தின்படி, ஒரு பெண் குழந்தை பிறந்த உடனேயே தடுப்பூசி போடும் பயணம் தொடங்குகிறது. குழந்தைப் பருவத்தில் போடப்படும் பிசிஜி (BCG), போலியோ, டிபிடி (DPT), ஹெபடைடிஸ் பி போன்ற தடுப்பூசிகள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. பருவ வயதை அடையும்போது, கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் தேவைப்படுகின்றன. இந்தப் பருவத்தில் தடுப்பூசிகள் போடுவது மிகவும் அவசியம்.

Women vaccine

ஹெச்.பி.வி (HPV) தடுப்பூசி: இது கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் பிற HPV தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பாலியல் செயல்பாடு தொடங்குவதற்கு முன்பாக, 9 முதல் 11 வயதுக்குள் இந்த தடுப்பூசியை போடுவது மிகவும் சிறந்தது. இதுவரை இந்தத் தடுப்பூசியை போடாதவர்கள், 45 வயது வரை போட்டுக்கொள்ளலாம்.

கர்ப்ப காலம்:

ஃப்ளூ (Influenza) தடுப்பூசி: இது கர்ப்ப காலத்தில் வரும் கடுமையான காய்ச்சலை தடுக்கிறது. கர்ப்பத்தின் எந்தக் கட்டத்திலும் இதை போட்டுக்கொள்ளலாம்.

டி.டி.ஏ.பி (Tdap - Tetanus, Diphtheria, Acellular Pertussis): கர்ப்பத்தின் 35 முதல் 37 வாரங்களுக்குள் இது போடப்படுகிறது. இது பிறந்த குழந்தையை மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் கக்குவான் இருமல் நோயிலிருந்து பாதுகாக்கிறது.

ரூபெல்லா (MMR) தடுப்பூசி: கர்ப்பம் தரிப்பதற்கு முன், ரூபெல்லாவுக்கான தடுப்பூசி போடவில்லை என்றால், அதை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். இது ரூபெல்லா தொற்று காரணமாக குழந்தைக்கு ஏற்படும் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது.

மேலும் படிக்க: Health tips for women: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் பெண்களா நீங்கள்? அப்போ இந்த ஹெல்த் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

மெனோபாஸ் காலம்:

மெனோபாஸ் மற்றும் அதற்குப் பின் வயது அதிகரிக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். அதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

நிமோகோக்கல் (Pneumococcal) தடுப்பூசி: நிமோனியா மற்றும் கடுமையான இரத்த ஓட்ட நோய்த் தொற்றுகளை தடுக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கடுமையான காய்ச்சல் சிக்கல்களை தவிர்க்க, Annual Influenza தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்வது அவசியம்.

Vaccination

ஷிங்க்ரிக்ஸ் (Shingrix - Shingles/Herpes Zoster) தடுப்பூசி: இது ஷிங்கிள்ஸ் எனப்படும் அக்கி நோயில் இருந்து பாதுகாக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒருமுறை அக்கி நோய் வந்திருந்தாலும், இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இது இருதய மற்றும் நரம்பு மண்டலங்களுக்கும் நன்மைகளை அளிக்கும்.

தடுப்பூசிகளை பற்றி அவ்வப்போது தெரிந்துகொண்டு சரியாக போட்டுக் கொள்வது, ஒரு பெண் தன் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும் மிகச் சிறந்த வழி. பருவ வயதாக இருந்தாலும், கர்ப்பம் தரிக்க திட்டமிட்டாலும் அல்லது வயதானவராக இருந்தாலும், சரியான நேரத்தில் சரியான தடுப்பூசி போட்டுக்கொள்வது நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்து, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உதவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP