herzindagi
image

கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் மழலைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்து

குழந்தைகள் தினத்தையொட்டி மழலைகள், சிறுவர்களிடம் கூற வேண்டிய வாழ்த்து, கவிதை இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் தினம் கொண்டாடுவதற்கு காரணமான ஜவஹர்லால் நேரு கூறிய விஷயங்களோடு வாழ்த்துகள் இணைக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2024-11-13, 17:35 IST

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் குழந்தைகளின் வாழ்வில் மகழிச்சி ததும்ப அவர்கள் மீது அக்கறை காட்டுவது அவசியம். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் வார்த்தைகள் ஏற்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம். இந்த நாளில் குழந்தைகளிடம் சொல்ல வேண்டிய வாழ்த்து, கவிதை மற்றும் மேற்கோள்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும்  இவற்றை பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவிக்கலாம். அதே போல குழந்தைகள் தினத்தின் பின்னணியையும், நேருவை பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைக்கவும்.

childrens day quotes greetings

  • உங்கள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் நம் அனைவரின் உள்ளத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
  • ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும் மழலைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்
  • துன்பமின்றி பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
  • ஆயிரம் கவலைகள் மனதில் இருந்தாலும் அதை மறக்க வைக்கும் ஒரே மருந்து குழந்தையின் சிரிப்பு மட்டுமே... குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
  • அழகான மழலைச் செல்வங்களே துள்ளித் திரியும் பட்டாம்பூச்சிகளே! உங்கள் பேச்சிலே உள்ளத்தை மகிழ வைத்து கள்ளமில்லா சிரிப்பிலே நெஞ்சத்தை நெகிழ வைக்கும் அன்புச் செல்வங்களே நாளைய பாரதத்தின் சிற்பிகளே! குழந்தைகள் தின வாழ்த்துகள்
  • அன்பென்னும் மொழி பேசி, செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் நாளைய உலகை ஆளவிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நாள் வாழ்த்துக்கள்...
  • தரமான கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்.
  • இந்த உலகத்தை ஒளிரச் செய்யும் ஒளி நீங்கள் உங்கள் எதிர்காலம் பிரகாசிக்கட்டும்... இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
  • குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்... குழந்தைகள் தின வாழ்த்துகள்
  • கனவுகள் பல காணுங்கள்... கற்பனை உலகைத் தேடுங்கள்... வண்ணச் சிரிப்பில் வாழுங்கள்... அன்புப் பாதையில் தொடருங்கள்... குழந்தைகல் தின நல்வாழ்த்துகள்
  • குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். அனைத்து குழந்தை செல்வங்களுக்கும், அவர்களை நாட்டின் வருங்கால தூண்களாக செம்மைப்படுத்தும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்
  • நாளைய இந்தியாவை உருவாக்கும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
  • பாரத தேசத்தின் வருங்கால தூண்களுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்

மேலும் படிங்க ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவதற்கு காரணம் என்ன ?

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர Her Zindagi கிளிக் செய்யவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com