நம்மூரில் பொதுவாகவே மாதவிடாய் நாட்களில் பெண்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. அதே போல் வீட்டினுள் இருக்கும் பூஜை அறை மற்றும் எந்தவிதமான தெய்வீக வழிபாடுகளுக்கும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் செல்ல கூடாது என காலகாலமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில வீடுகளில் மாதவிடாய் நட்களில் பெண்கள் வீட்டின் மற்ற உறுப்பினர்களை விட்டு தள்ளி இருக்கணும், யாரையும் தொட்டு பேசக் கூடாது, சமையலறைக்குள் நுழையக் கூடாது என இப்படி ஏகப்பட்ட நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன. இதுக் குறித்த பல அறிவியல் விவாதங்கள், மத நம்பிக்கை குறித்த பேச்சுக்கள், பகுத்தறிவு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும் இந்த மரபில் இருந்து மாற பலரும் மறுக்கின்றனர்.
குறிப்பாக நகரங்களை காட்டிலும் தென் மாவட்ட கிராமங்களில் மரபு சார்ந்த இதுப் போன்ற பழக்கங்கள் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின்னால் அறிவியல் மற்றும் மத நம்பிக்கை இரண்டுமே இருப்பதாக பலரும் நம்புகின்றனர். அறிவியல் கூற்றுப்படி, இந்த நேரத்தில் பெண்களின் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சாதாரண நாட்களில் பெண்களின் உடல் இருப்பதை போல மாதவிடாய் நாட்களில் இருக்காது. பலவிதமான மாற்றங்கள் நிகழும். அவர்களுக்கு தேவையான, ஓய்வு, தூக்கம், மன நிம்மதி ஆகியவை கிடைக்க வேண்டும். இது எல்லாமே அறிவியல் சொல்லும் உண்மைகள்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் காலத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் பட்டு போய்விடுமா?
ஆனால் இதை இப்படி சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதில் அலட்சியம் காட்டுவார்கள் என்பதால்தான் முன்னோர்கள் இதை சாஸ்திரம் சம்பிரதாயம், தெய்வ நம்பிக்கை வழியாக புகுத்தி அந்த 3 நாட்களுக்கு பெண்களுக்கு ஓய்வு கொடுக்க நினைத்தனர். ஆனால், காலப்போக்கில் இதன் அர்த்தத்தை பலரும் புரிந்து கொள்ளாமல் இதன் வழியாக பெண்களை ’தீட்டு’ என்ற பெயரில் ஒதுக்கி அவர்களை மனதளவில் காயப்படுத்தினர். அதே போல், அந்த காலத்தில் சானிட்டரி நாப்கின்களின் பயன்பாடுகள் இல்லை. அதனால் பெண்கள் மாதவிடாய் நாட்களில் புடவை துணிகளை பயன்படுத்தினர். இதனால் அவர்கள் கோயில் போன்ற பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என அறிவுருத்தப்பட்டனர். இதுப்போல் முன்னோர்கள் பெண்களின் நலனுக்காக செய்த அனைத்து விஷயங்களை, தற்போது பலரும் அவர்களை அடக்கி, ஒதுக்கி வைக்கும் கருவியாக பார்ப்பதாக சமூக ஆர்வலங்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதே போல தான், பண்டிகை நாட்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் என்றால் அவர்கள் பூஜை செய்ய தமிழ் குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அவர்கள் சமைக்கும் உணவை சாமிக்கு படைப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ’வீட்டுக்கு தீட்டு’ என ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். இதனால் மனதளவில் சோர்வடையும் பெண்கள் அன்றைய நாள் முழுவதும் எந்தவித கொண்டாட்டங்களிலும் ஈடுபடலாம் தனிமையில் இருந்து விடுகின்றனர்.
இது முழுக்க முழுக்க பெண்களின் விருப்பத்திற்கு ஏற்றது. மாதவிடாய் நாட்களில் அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம். அல்லது ஓய்வு தேவை என நினைக்கும் பெண்கள் தாரளமாக ஓய்வு எடுக்கலாம். நல்ல நாளில் மாதவிடாய் வந்ததை அபசகுணமாகவும், தடங்கலாகவோ பார்ப்பது தவறான ஒன்று.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com