பச்சிளம் குழந்தைக்கு தைலம் தேய்க்கலாமா? கூடாதா? உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கோங்க

சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தைக்கு தைலம் மற்றும் கற்பூரத்தை குழைத்து மூக்கில் தேய்த்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. 
image

குழந்தைக்கு தைலம் தேய்க்கலாமா என்ற கேள்வி பல தாய்மார்களுக்கு உள்ளது. பொதுவாக ஒரு வயதுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் சென்னையில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தைக்கு தைலம் மற்றும் கற்பூரத்தை குழைத்து மூக்கில் தேய்த்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உங்கள் குழந்தைக்கு சளி பிடித்தால் தைலம் பயன்படுத்தலாமா கூடாதா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒரு சில தைலங்கள் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன, அதை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக சளி மற்றும் ஜலதோஷம் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு, சில தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதையும் மிகவும் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும். தைலத்தை தடவும்போது, குழந்தையின் மூக்கு மற்றும் கண்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் கற்பூரம் குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதை தைலத்துடன் கலந்து தேய்க்க கூடாது என்று நினைவில் கொள்ளுங்கள்.

baby

சுவாச பிரச்சனைகள்:


குழந்தைகளின் மூச்சுக்குழாய் மிகவும் சிறியதாகவும் மென்மையாகவும் இருக்கும். தைலத்தில் உள்ள மென்தால், கற்பூரம், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவை சுவாசப்பாதையைத் தூண்டி, மூச்சுத்திணறல், சுவாசத் தடை போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம். இதனால் சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற கடுமையான பிரச்சனைகளும் ஏற்படலாம்.

தோல் எரிச்சல் மற்றும் அலர்ஜி:


குழந்தைகளின் தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. தைலத்தில் உள்ள இரசாயனங்கள் சிவப்பு தடிப்புகள், எரிச்சல், கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சில குழந்தைகளுக்கு கடுமையான தோல் அலர்ஜி ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மேலும் படிக்க: கைக்குழந்தை ஓயாமல் அழுவது ஏன்? பசி மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருக்கு!

வாய்வழி நச்சுத்தன்மை:


குழந்தைகள் தங்கள் கைகளை வாயில் வைக்கும் பழக்கம் கொண்டவை. தைலம் பூசிய இடத்தை அவர்கள் தொட்டு, வாயில் வைத்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குழப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் விஷத்தன்மை கொண்டவை.

baby hand in mouth

அந்த வரிசையில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தைலம் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக, இயற்கை வழிகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்த முறைகளை பின்பற்றுவது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, எப்போதும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Image source: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP